டெங்கு: டெல்லியில் 1000 பேர் பாதிப்பு
டெல்லி:
டெல்லியில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில்தான்டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. டெல்லியில் இதுவரை டெங்குவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது.டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இன்று பார்வையிட்டுநலம் விசாரித்தார். இங்கு 170 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து அன்புமணிஆய்வு செய்தார். கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக எந்த நோயாளியும் மருத்துவமனையில்அனுமதிக்கப்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் இங்குள்ள டெங்கு நோய்காகன வெளி நோயாளிகள் பிரிவில் 9000 பேர்வந்து பரிசோதித்து சென்றுள்ளனர். இன்று காலை 10 மணி நிலவரப்படி டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கை தலைநகரில் 1029 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications