இலங்கை: ராணுவம் மும்முனைத் தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் வட பகுதியான முகமலை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் ராணுவம்மும்னைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் அமைதி செயலகம் வெளியிட்டுள்ளஅறிக்கை: இன்று காலை 6 மணி முதல் இலங்கை ராணுவம், முகமலை, கிலாலி,நாகர்கோவில் ஆகிய இடங்களையொட்டியுள்ள விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் ஊடுறுவ முயற்சிகளை தொடங்கியுள்ளது.

பெரிய அளவிலான, மும்முனைத் தாக்குதலில் இலங்கை ராணுவம் ஈடுபட்டுள்ளது.இப்பகுதிகளில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும்சண்டை நடந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தான், ஜெனீவாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளத் தயார் என்று புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில்இன்று காலை முதல் ராணுவம் மும்னைத் தாக்குதலில் இறங்கியுள்ளது பதட்டத்தைஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் ஜெனீவாவில்நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விடுதலைப் புலிகள்அமைப்பு தயாராக உள்ளது.

அதேசமயம், ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தினால் நிலைமை மோசமாகும்.எங்களது முடிவை நாங்கள் மறு பரிசீலனை செய்ய நேரிடும் என்று கூறியிருந்தார்.

நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர் கிளிநொச்சி சென்று தமிழ்ச் செல்வனுடன் நடத்தியபேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த அறிவிப்பை தமிழ்ச் செல்வன் வெளியிட்டார்.

ராணுவத் தாக்குதல் தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத்சமரசிங்கே கூறுகையில், நாங்கள் தாக்குதல் எதையும் தொடுக்கவில்லை. விடுதலைப்புலிகள் நடத்தும் தாக்குதலை எதிர்த்து பதிலடி மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.

கமலை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் அதிக அளவிலானவீரர்களை குவித்து வருகின்றனர். தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். அவர்களைஎதிர்த்து மட்டுமே ராணுவம் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையைநிறுத்த வேண்டும் என நார்வே அமைச்சர் எரீக் சொல்ஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் சம்மதம் தெரிவித்துள்ளதைபாராட்டிய அவர், இந்த பேச்சுவார்த்தை அமைதியான முறையில் நடக்க இருதரப்பினரும் சிறந்த முறையில் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இனப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண இருதரப்பினரும் முன்வர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+