ஓட்டுக்காக கொடுத்த பணத்தில் கள்ள நோட்டு!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களைக் கவர திமுக, அதிமுக ஆகிய கட்சியினர் கொடுத்த பணத்தில் கள்ளநோட்டுக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் இன்று இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இதற்கானபிரசாரத்தின்போது திமுகவினரும், அதிமுகவினரும் சரமாரியாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகசர்ச்சை எழுந்தது.இதுதொடர்பாக தெற்குவாசல் பகுதியில் பெரும் மோதலும் நடந்தது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு இருகட்சியினரும் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுக்கள் கலந்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
கடந்த சில நாட்களில் மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வங்கிகளில் பலரும் பணத்தை போட வந்துள்ளனர்.அப்படி வந்த பணத்தில் பல கள்ள நோட்டுக்கள் என வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2 கள்ள 1000 ரூபாய் நோட்டுக்களையும் வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பரபரப்புஏற்பட்டுள்ளது. கட்சிகளிடமிருந்து பணத்தை வாங்கிய பலரும் தங்களிடம் இருப்பது நல்ல நோட்டா, கள்ளநோட்டா என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications