தீவிரவாதம்: உலகளாவிய முயற்சி தேவை-பிளேர்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

தீவிரவாதத்தை ஒழிக்க உலகளாவிய ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று பிரதமர்மன்மோகன் சிங்கும், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டபிரதமர் டோனி பிளேரை சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடம் நீடித்த இந்தசந்திப்புக்குப் பின்னர் பிளேரும், சிங்கும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மன்மோகன் சிங் பேசுகையில், லண்டனிலும், அதைத் தொடர்ந்துமும்பையிலும் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களும் தீவிரவாதத்தின் பயங்கரமுகம் ஆகும். இரு நாடுகளும் தீவிரவாதத்தை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்உள்ளன.

உலக அளவில் தீவிரவாதம் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதைதீர்க்க உலகளாவிய, கூட்டு நடவடிக்கை தேவை.

இந்தியாவின் அண்டை நாடு மிகவும் பாதுகாப்பற்ற அணு ஆயுதக் கொள்கையைகடைப்பிடித்து வருகிறது. அணு ஆயுத ரகசியங்களை அந்த நாடு பல்வேறுநாடுகளுக்கும் கொடுக்கிறது. இதனால் இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகுக்கே பெரும்ஆபத்து நேரிடும் அபாயம் உள்ளது.

வட கொரியாவின் அணு குண்டு சோதனை மிகவும் கவலை தருகிறது. இதனால்கொரிய தீபகற்பப் பகுதியிலும், ஆசியாவிலும் பதட்டம் அதிகரித்துள்ளது என்றார்மன்மோகன் சிங்.

பிளேர் பேசுகையில், அணு ஆயுத நாடுகள் விஷயத்தில் இந்தியாவையும், வடகொரியாவையும் ஒரே தட்டில் வைத்தப் பார்க்க முடியாது. இந்தியா பொறுப்பான,உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. எதைச் செய்தாலும் அதில் ஒரு ஜனநாயகத்தை,பொறுப்பான தன்மையை இந்தியா கடைப்பிடிக்கிறது.

ஆனால் வட கொரியா அப்படி இல்லை. அங்கு ஜனநாயகம் கிடையாது. அவர்கள்எதையும் முறைப்படி, ஒழுங்குடன் செய்வதில்லை. இதனால்தான் அவர்களது அணுஆயுத சோதனை மிகவும் கவலை தருவதாக அமைந்துள்ளது என்றார் பிளேர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+