தாத்தா ஆனார் ரஜினி: ஐஸுக்கு ஆண் குழந்தை!
Subscribe to Oneindia Tamil
சென்னை :
நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தைபிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.நடிகர் தனுஷுக்கும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா கர்ப்பமானார். இதனால் ரஜினி குடும்பமும், தனுஷ் குடும்பமும்சந்தோஷத்தில் மூழ்கின.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ஐஸ்வர்யாவுக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்துஅவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாலை 5.30 மணிக்கு அழகானஆண் குழந்தை பிறந்தது. இது சுகப் பிரசவம்.
பேரன் பிறந்த தகவலை அறிந்ததும் ரஜினி தனது மனைவி, மகள் செளந்தர்யாவோடு மருத்துவமனைக்குவிரைந்து வந்தார். தனுஷ், அவரது தந்தை கஸ்தூரி ராஜா, மனைவி விஜயலட்சுமி ஆகியோரும் குழந்தையைப்பார்த்து குதூகலித்தனர்.பேரன் பிறந்திருப்பதால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட ரஜினிக்கு திரையுலகினர் பலரும் தொலைபேசிமூலம் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ள தனுஷுக்கும் திரையுலகினர்வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications