ரிமோட் பொம்மை குண்டுகள்: இலங்கையில் பீதி!
கொழும்பு:
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொம்மை கார்கள், படகுகள், விமானங்கள் உள்ளிட்டவற்றுக்குஇலங்கை அரசு தடை விதித்துள்ளது. இவற்றை விடுதலைப் புலிகள் வெடிகுண்டுகளாக பயன்படுத்தலாம் என்றபீதியே இதற்குக் காரணம்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், கடைகளில் இப்போது ரிமோட் கண்ட்ரோல் பொம்மைகார்கள், விமானங்கள், படகுகள் போன்றவை எளிதாக கிடைக்கின்றன.இவற்றை குழந்தைகள் சாலையில் வைத்து, நிஜக் காரை போல விளையாடும் அளவுக்கு அவை அதி நவீனரிமோட் வசதியுடன் உள்ளன. இது தவறானவர்கள் கைக்கு கிடைத்து, அந்த பொம்மை காரில் வெடிகுண்டுகளைவைத்து ராணுவ வாகனத்தின் அடியில் அந்த காரை கொண்டு சென்று வெடிக்கச் செய்தால் என்ன ஆவது?
இதுமாதிரியான பொம்மை கார்களில் 2 முதல் 3 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை வைக்க முடியும்.விடுதலைப் புலிகள் இத்தகைய ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய பொம்மை கார்களை வெடிகுண்டுகளாகபயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் இதற்கு தடை விதிக்க அரசுக்குப் பரிந்துரைத்தோம்என்றார்.
ரிமோட் கண்ட்ரோல் பொம்மை கார்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்துள்ள போதிலும் கூடகொழும்பில் உள்ள பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்குவைக்கப்பட்டுள்ள பொம்மைக் கார்கள் விற்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளன.












Click it and Unblock the Notifications