தேமுதிக தொண்டர்கள் மீது தடியடி!
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு நடிகர் விஜயகாந்த்தலைமையில் மறியல் செய்ய முயன்ற தேமுதிக தொண்டர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு இன்று நடந்து வரும் வாக்குப் பதிவில் பல வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுபோடுவதும், வாக்குச் சீட்டுக்களைக் கைப்பற்றுவதும் பெருமளவில் நடந்தது. பல இடங்களில் அதிமுக, மதிமுக,தேமுதிக தொண்டர்கள், வேட்பாளர்கள் தாக்கப்பட்டனர்.இந்த நிலையில் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநகரகாவல் ஆணையர் அலுவலகதிதர்கு விரைந்தனர்.திமுகவினர் பெருமளவில் முறைகேடுகளில் நடப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி ஆணையரிடம் மனு கொடுக்கவிஜயகாந்த வந்திருந்தார். அவர்களை உள்ளே அனுமதிக்காமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆவேசமடைந்த தேமுதிக தொண்டர்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால்அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அதிக அளவிலான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள்தேமுதிக தொண்டர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். போலீஸ் தடியடியில் பல தேமுதிக தொண்டர்கள்காயமடைந்தனர்.
இதனால் கோபமடைந்த விஜயகாந்த், ஆணையரை சந்தித்து புகார் மனுவைக் கொடுக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று கூறினார். இதையடுத்து விஜயகாந்த்தை மட்டும் உள்ளே செல்ல போலீஸார் அனுமதித்தனர்.
பின்னர் ஆணையர் லத்திகா சரணை சந்தித்து விஜயகாந்த் மனு கொடுத்தார். பெருமளவில் வாக்குச் சாவடிகளைகைப்பற்றி முறைகேடுகள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதனது மனுவில் கோரியிருந்தார் விஜயகாந்த்.
சென்னை நகரில் பல இடங்களில் பெருமளவில் வாக்குச் சாவடிகள் முறைகேடுகள் நடந்திருப்பதை போலீஸாரேஒத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக பெரியமேடு, ராயபுரம், அயனாவரம், எம்.ஜி.ஆர். நகர் ஆகியபகுதிகளில்தான் அதிக அளவில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு சென்னை நகர் முழுவதும் வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல், வாக்குச்சீட்டுக்களை கைப்பற்றுதல், கள்ள ஓட்டுப் போடுதல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
130வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தனசேகரனின் ஆதரவாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதொண்டர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பல கம்யூனிஸ்ட் தொண்டர்கள் காயமடைந்தனர். இதில்வேட்பாளர் மணிகண்டன் படுகாயமடைந்தார்.
முன்னதாக, சென்னை நகரில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குச் சாவடிகளுக்கு வந்துவாக்களிக்கத் தொடங்கினர். ஆனால் பல வாக்குச சாவடிகளில் கும்பல் கும்பலாக வந்து கள்ள ஓட்டுப் போடும்முயற்சி நடந்தது.
மொத்தம் உள்ள 3295 வாக்குச் சாவடிகளில் 177 இடங்களில் பிரச்சினை வரலாம் என எதிர்பார்க்கப்பட்டதால்கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் போலீஸாரையும் மீறி பலஇடங்களில் வன்முறை மூண்டது.
சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு உள்ள்ளிட்ட தென் சென்னை பகுதிகளிலும், வடசென்னையின் பல பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளில் மோதல்கள் மூண்டன.
113வது வார்டுக்கான ஓட்டுச் சாவடி அமைந்துள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குள் சைதை பாலாஜி என்பவர்தலைமையில் ஒரு கும்பல் புகுந்தது. வாக்குச் சாவடிக்குள் புகுந்து அவர்கள் வாக்குச் சீட்டுக்களை எடுத்து தங்கள்இஷ்டத்திற்கு முத்திரைகளை குத்தி உள்ளே போட்டனர்.
இதற்கு அதிமுக பூத் ஏஜென்ட் சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அக்கும்பல் சண்முகத்தைதாக்கியது. இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. உடனடியாக அங்கிருந்த போலீஸாரிடம் சண்முகம்புகார் செய்தார். ஆனால் போலீஸார் கண்டுகொள்ளவில்லை.
இதேபோல ஜாம்பஜார், ஜாபர்கான்பேட்டை, நாகேஸ்வர ராவ் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் கும்பல்கும்பலாக வந்து கள்ள ஓட்டுப் போட்டனர். அவர்களை போலீஸார் எதுவும் கேட்காததால், வாக்காளர்கள்எதுவும் பேசமுடியாமல் அமைதியாக திரும்பிச் சென்றனர்.
பல இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தும் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.இதனால் அவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்.கே.நகர் 8வது வார்டில் உள்ள வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுப் போடுவதாக அதிமுகவினர் புகார்தெரிவித்தனர். கட்டுக் கட்டாக ஒருவர் வாக்குச் சீட்டுக்களைக் கொண்டு வந்தபோது மாவட்ட அண்ணாதொழிற்சங்க செயலாளர் ரவீந்திர ஜெயின் அதைப் பறித்தார்.
இதையடுத்து அதிமுகவினர் மீது தாக்குதல் நடந்தது. உடனடியாக போலீஸார் தலையிட்டு கலைத்து விட்டனர்.
சைதாப்பேட்டை 135வது வார்டில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஏராளமான ஆண்களும், பெண்களும்கூடியிருந்தனர். அப்போது ஒரு கும்பல் கம்பு, கட்டைகளுடன் வந்து கூடியிருந்தவர்களை அடித்து விரட்டியது.அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகளும் அடித்து விரட்டப்பட்டனர். தேர்தல்பணியாளர்களும் மிரட்டப்பட்டனர்.
பின்னர் அங்கிருந்த வாக்குச் சீட்டுக்களை எடுத்து தங்களது சின்னத்தில் முத்திரை குத்தி பெட்டியில் போட்டுவிட்டு அக்கும்பல் கிளம்பிச் சென்றது. இந்தத் தகவல் அறிந்ததும் அதிமுக வேட்பாளர் விஜயா உள்ளிட்ட 50பேர் அங்கு வந்தனர்.
கள்ள ஓட்டுப் போடுவதை எதிர்த்து அவர்கள் குரல் கொடுத்தபோது வேட்பாளர் விஜயாவை அக்கும்பல்உருட்டுக் கட்டையால் தாக்கியது. சுயேச்சை வேட்பாளர்களான டெல்லி பாய், மஞ்சுளா, விஜயலட்சுமி, பரிமளா,அமுதா ஆகியோரும் தாக்கப்பட்டனர்.
இதை போலீஸார் கண்டிக்காததால், வேட்பாளர்களும் அவர்களுடன் வந்தவர்களும் சாலை மறியலில்ஈடுபட்டனர். இதையடுத்து விஜயா உள்ளிட்ட 6 வேட்பாளர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல 81வது வார்டில் மதிமுக வேட்பாளர் மார்க்கெட் சேகரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. கள்ளஓட்டுக் கும்பலைத் தடுக்க முயன்றதால் சேகர் வெட்டப்பட்டார்.
இதேபோல நகரின் பல பகுதிகளிலும் கும்பல் கும்பலாக வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுப்போடுவது நடந்ததால் பதட்டம் காணப்படுகிறது. ஆங்காங்கே அதிமுக, மதிமுக மற்றும் சுயேச்சைவேட்பாளர்களும், கட்சிகளின் தொண்டர்களும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் மாநிலத்தின் இதர பகுதிகளில் வாக்குப் பதிவு அமைதியாக நடந்துவருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் கட்டத் தேர்தல் நடைபெறும்அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications