தொகுதியில் கலவரம்; தேக்கடியில் உல்லாசம்!
மதுரை:
திமுக-அதிமுகவினர் இடையே வன்முறைச் சம்பவம் நடந்தபோது மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலுக்குநியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் 2 பேரும், தேக்கடி, ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றிருந்தது தெரியவந்துள்ளது.
மதுரை மத்திய தொகுதி தேர்தல் பார்வையாளர்களாக சஞ்சீவ் குமார், மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.தேர்தலைக் கண்காணிக்கவும், செலவு விவரங்களை கணக்கிடவும் இவர்கள் மதுரைக்கு வந்திருந்தனர்.செப்டம்பர் மாத இறுதியில் மதுரை வந்த அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில்ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி மதுரை தெற்குவாசல் அருகே சின்னக் கடை வீதியில் திமுக,அதிமுகவினர் இடையே கடும்
மோதல் நடந்தது.
இந்த மோதலில் பலர் காயமடைந்தனர். அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவின் கார் அடித்துநொறுக்கப்பட்டது. இந்த அமளி குறித்து தேர்தல் பார்வையாளர்களுக்கு ராஜன் செல்லப்பா தகவல் கொடுத்தார்.ஆனால் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இதையடுத்து பெரியார் பேருந்து நிலையம் அருகே ராஜன் செல்லப்பா சாலை மறியல் செய்தார். மாநகரகாவல்துறை ஆணையரிடம் புகார் செய்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பின்னர்தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில் மாநிகர காவல்துறை ஆணையர் சிதம்பரச்சாமி மற்றும் 2 உதவி ஆணையர்கள்உள்ளிட்டோரை அதிரடியாக மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
கலவரம் நடந்து பெரும் அமளி, துமளி நிலவியபோது தேர்தல் பார்வையாளர்கள் இருவரும் எங்கே சென்றனர்என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. சம்பவம் நடந்த அன்று பார்வையாளர் சஞ்சீவ்குமார் தேக்கடிக்கு தனது உதவியாளருடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் சுற்றிப் பார்த்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், உதவியாளர் கொடுத்த தகவல்களும்இதை உறுதிப்படுத்துகின்றன.
இதேபோல இன்னொரு பார்வையாளரான மீனா, ராமேஸ்வரம் சென்றுள்ளார். செப்டம்பர் மாத இறுதியிலும்அவர் ஒருமுறை ராமேஸ்வரம் சென்றுள்ளார். இப்படி தேர்தல் பார்வையாளர்கள் இருவரும் ஆளுக்கொருபக்கமாக போய் விட்டதால் சம்பவம் நடந்த இடத்திற்கு அவர்களால் வர முடியவில்லை.
வன்முறை நடந்த தினத்தன்று தேர்தல் பார்வையாளர்கள் இருவரும் தொகுதியில் இல்லாமல் இன்பச் சுற்றுலாபோனது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போதும் மதுரைக்கு தேர்தல் பார்வையாளர்களாக வந்தவர்கள்கொடைக்கானலுக்கும், தேக்கடிக்கும் டூர் கிளம்பிப் போய் சர்ச்சையில் சிக்கி பின்னர் தேர்தல் பணியிலிருந்துவிடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications