ஈராக் போரில் 6.5 லட்சம் பேர் சாவு!
லண்டன்:
ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் இதுவரை 6 லட்சத்து 55ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலேன்ட் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பர்க் சுகாதார நிறுவனம் இதுதொடர்பாகஈராக்கில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதன் முடிவுகள் தி லேன்செட் என்ற மருத்துவ இதழில்வெளியாகியுள்ளது.அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர் ஈராக்கில் ஊடுறுவியது முதல் தற்போது வரை ஈராக்கில்எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஈராக்கில் உள்ள 47 இடங்களில்,1849 வீடுகளில், 12,801 பேரை சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் கில்பர்ட் பர்ஹாம் கூறியுள்ளதாவது: இந்த ஆய்வின் மூலம் அமெரிக்காதலைமையிலான படைகளின் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு 6 லட்சத்து 55 ஆயிரம் பேர்கொல்லப்பட்டுள்ளனர்.
நாங்கள் சந்தித்த ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் உயிரிழந்துள்ளனர். அனைவருமே அமெரிக்காதலைமையிலான படையினரால்தான் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாக ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக் போரில் இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சிஅலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் போரில் இதுவரை 40,000 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஈராக்கில்தற்போது உள்ள அமெரிக்க ஆதரவு அரசு கூறியுள்ள நிலையில் ஆறரை லட்சம் பேருக்கும் மேல்கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த ஆய்வு முடிவுகளை இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் நிராகரித்துள்ளார். இதுகுறித்து பிளேரின்செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், இது சரியான ஆய்வு அல்ல. ஆய்வில் பயன்படுத்தப்பட்ட முறையைஏற்க முடியாது.
இந்த எண்ணிக்கையை நம்ப முடியவில்லை. இதில் உண்மை இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. ஈராக்கில்உள்ள நிலைமையை சீர்குலைக்கும் விதமாக இந்த ஆய்வு அமைந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
ஈராக்கின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வை ஒரு நாடு முழுமைக்கான ஆய்வாக கருத முடியாது. இந்தஆய்வை ஆரம்பத்திலிருந்தே ஆதரிக்கவில்லை. இப்போதும் இதை ஏற்க முடியாது.
ஈராக்கில் உயிரிழந்தவர்கள் அனைவருமே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள்தான். ஈராக் அரசோ,வெளிநாட்டுப் படைகளோ ஈராக்கியர்களைக் கொல்லவில்லை.தாக்குதல்களில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் எங்களிடம்இல்லை. அதை தர வேண்டியது ஈராக் அரசின் வேலை என்றார் அவர்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,ஈராக்கில் ஏராளமான அப்பாவிகள் இறந்துள்ளதை நான் அறிவேன். அதேசமயம், இந்த அளவுக்குஇறந்திருப்பார்கள் என்று கூறப்படுவதை நான் நம்ப மாட்டேன், ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஈராக்அரசும் இந்த ஆய்வறிக்கையை நம்ப மறுத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications