நளினிக்கு கருணை: கருணாநிதி மீது ஜெ.தாக்கு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினியை விடுதலை செய்வது தொடர்பாக கருணாநிதியின் கருத்து, ஜெயின்கமிஷன் குற்றச்சாட்டை நிரூபிப்பது போல உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருச்சியில் அதிமுக கூட்டணியின் சார்பில் இன்று உள்ளாட்சித் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில்கலந்து கொண்டு ஜெயலலிதா பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு கருணை காட்டி விடுதலை செய்ய வேண்டும் என்றுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து நிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், அப்படி ஒரு நிலை உருவானால்மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார். இப்படி கூறியுள்ளதன் மூலம் கருணாநிதி குறித்து இதுநாள் வரைமக்கள் நினைத்திருந்தது உண்மையாகியுள்ளது.

ஜெயின் கமிஷன் கூறிய குற்றச்சாட்டுக்களை கருணாநிதியே இப்போது உண்மை என்று நிரூபித்து விட்டார்.

எனது பாதுகாப்பை இந்த அரசு குறைத்ததற்காக நான் வருத்தம் அடையவில்லை, கவலைப்படவில்லை. எனக்குப்பாதுகாப்பாக தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் இருக்கிறார்கள். அதற்கும் மேலாக கடவுள் என் பக்கம்உள்ளார் என்றார் ஜெயலலிதா.

பின்னர் திருச்சி பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் விலைவாசிராக்கெட் போல ஏறியுள்ளது. திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை திரும்பத்திரும்ப ஏற்றி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ள போதிலும் கூட இங்கு பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசு குறைக்கவில்லை. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்களும் பதில் சொல்லியே தீரவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் இன்னும் ஓர் அதிர்ச்சி காத்துள்ளது. பஸ் கட்டணத்தை உயர்த்தப் போகிறார்கள்.போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், ஆட்சி நடத்த முடியாமல் இருக்கும் கருணாநிதி எப்போதுகட்டணத்தை உயர்த்தலாம் என காத்திருக்கிறார்.

திமுக அரசு கொடுக்கும் இலவச டிவி சரியாக இயங்கவில்லை என மக்கள் புகார் கூறுகிறார்கள். சுவிட்ச்சை ஆன்செய்தால் வெறும் லைட்சான் எரிகிறதாம். படமே தெரியவில்லை என்கிறார்கள்.

நேர்மையாக நடக்கும் அதிாகரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், பணி நீக்கம் செய்யப்பட்டாலும் நான்அவர்களின் பெயர்களை குறித்து வைத்துக் கொண்டு, நான் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மீதான நடவடிக்கையைரத்து செய்வேன். விசாரணை நடந்தாலும் அதனையும் ரத்து செய்வேன் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+