வாக்குப் பதிவை உடனே நிறுத்த ஜெ. கோரிக்கை
சென்னை:
சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெருமளவில் முறைகேடுகளில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். எனவேஉடனடியாக வாக்குப் பதிவை நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம்முழுவதும் வாக்குப் பதிவில் பெருமளவில் பிரச்சினை இல்லாத நிலையில், சென்னை மாநகராட்சியில் மட்டும்பெரும்பாலான பகுதிகளில் பெரும் வன்முறை மூண்டுள்ளது.திமுகவினர் வாக்குச் சாவடிகளுக்குள் கும்பல் கும்பலாக புகுந்து கள்ள ஓட்டுப் போட்டு வருவதாக அதிமுக,மதிமுக, தேமுதிக மற்றும் சுயேச்சைகள் புகார் கூறியுள்ளனர். பல இடங்களில் அதிமுக, மதிமுக, தேமுதிகவேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்கு ஜெயலலிதா தனதுதோழி சசிகலாவுடன் வந்து ஓட்டுப் போட்டார். ஓட்டுப் போட்ட பின்னர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம்பேசுகையில், ஓட்டுப் பதிவு சென்னையில் முறையாக நடக்கவில்லை. நான் இங்கு வருவதற்கு முன்பேதிமுகவினரும், குண்டர்களும் உள்ளே புகுந்து பூத்களை கைப்பற்றி விட்டனர்.
பொதுமக்கள் யாரையும் வாக்குச் சாவடி பக்கமே வர அனுமதிக்கவில்லை. இங்கு மட்டுமல்ல சென்னைமுழுவதும் இதே நிலைதான் நிலவுகிறது. யாரும் ஓட்டுப் போட முடியவில்லை.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார்கூறியபோது, அமைதியாக வாக்குப் பதிவு நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை நகர வாக்காளர்கள் பீதியில் உள்ளனர். குண்டர்கள் மற்றும் திமுகவினர் தாக்குதலால் அதிமுகவினர்பதட்டமடைந்து தலைமைக் கழக அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
எழும்பூரில் மதிமுக வேட்பாளரை ஒரு ரவுடிக் கும்பல் வெட்டியுள்ளது. வேட்பாளர்கள் உயிருக்கு பாதுகாப்புஇல்லை. உடனடியாக வாக்குப் பதிவை நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் புகார் கொடுக்ககழக வக்கீல்கள் விரைந்துள்ளனர்.
147வது வார்டில் திமுகவினர் வாக்குப் பெட்டிகளை நடுத் தெருவில் எடுத்து வைத்துக் கொண்டு தங்களதுவிருப்பத்திற்கேற்ப உதயசூரியனுக்கு முத்திரைகளை குத்தி பெட்டிக்குள் போட்டுள்ளனர். பொதுமக்களை அந்தப்பக்கமே வரவிடவில்லை.
இன்று நடப்பது தேர்தலே அல்ல. ஜனநாயகப் படுகொலை நடக்கிறது, கேலிக் கூத்து நடக்கிறது. 155வார்டுகளிலும் உண்மையான ஓட்டுப் பதிவு நடைபெறவில்லை. இதை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்யவேண்டும்.
சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். உள்ளூர்போலீஸாரை தேர்தல் பணியில் நியமிக்கக் கூடாது. ராணுவத்தையும், வெளி மாநிலப் போலீஸாரையும் வைத்துஇங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்.
இங்கு தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம். இது கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலதேர்தல் ஆணையரும் அவருடன் உள்ளவர்களும் கருணாநிதியின் கைக் கூலிகளாக உள்ளனர் என்று கூறினார்ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications