தூக்கிலிருந்து தப்பிய சிங்கப்பூர் இந்தியர்
சிங்கப்பூர்:
மனைவியைக் கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியரின் தண்டனைஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி நாயுடு (வயது 45). இவரது மனைவி சித்ராபதி நாராயணசாமி (36).லேசாக மன நலம் பாதிக்கப்பட்டவரான கிருஷ்ணசாமி நாயுடு, தனது மனைவி தன்னை விட நன்கு வேலை செய்துநிறைய சம்பாதிப்பதால் பொறாமை கொண்டார்.இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணசாமி நாயுடு மனைவியின் அலுவலகத்திற்குச் சென்ற அங்கு அவரைகத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து கிருஷ்ணசாமி நாயுடுவை கைது செய்த போலீஸார்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கிருஷ்ணசாமி நாயுடுவுக்கு மரண தண்டனைவிதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதுவாதாடிய கிருஷ்ணசாமியின் வழக்கறிஞர், கிருஷ்ணசாமியால் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவரதுகோபம் மனைவியின் மீது மட்டுமே இருந்தது. அதை அவர் உணர்ந்து விட்டார்.
மேலும், கிருஷ்ணசாமியின் மன நல பாதிப்பு முன்பை விட தற்போது வெகுவாக குறைந்து விட்டதாகசிறைச்சாலை மன நல மருத்துவரும் சான்றிதழ் அளித்துள்ளார். எனவே கிருஷ்ணசாமிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரினார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் சூ ஹான் டெக், டாய் யோங் குவாங் மற்றும் வி.கே.ராஜா ஆகியோர் அடங்கியபெஞ்ச், கிருஷ்ணசாமிக்கு மரண தண்டனை விதித்தது தவறானது. அவரது மனைவி மீது இருந்த ஆத்திரத்தால்தான் கிருஷ்ணசாமி கொலை செய்துள்ளார். சமூகத்தின் மீது அவருக்கு கோபம் இல்லை.
எனவே அவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு அது ஆயுள் தண்டனையாக மாற்றப்படுவதாகஅறிவித்தனர்.
இந்த தீர்ப்பைக் கேட்டதும் கிருஷ்ணசாமி மகிழ்ச்சி அடைந்தார். கோர்ட்டுக்கு வந்திருந்த தனது உறவினர்களைசந்தித்த அவர் ஹேப்பி தீபாவளி சொல்லி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications