செஞ்சியில் பெரும் கலவரம்: துப்பாக்கிச் சூடு
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ளாட்சித் தேர்தலின் 2வது கட்ட வாக்குப் பதிவு முடிந்தவுடன் பெரும்கலவரம் ஏற்பட்டது. இதை அடக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
செஞ்சியில் நேற்று 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவுமுடிந்தவுடன், சுமார் ஐந்தரை மணியளவில் காந்தி பஜார் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு அருகே அதிமுகமுன்னாள் கவுன்சிலர் தணிகாச்சலம் நின்றிருந்தார்.அப்போது ஒரு கும்பல் ஆட்டோவில் அங்கு வந்தது. அக்கும்பல் இரும்புக் கம்பியால் தணிகாச்சலத்தைசரமாரியாக தாக்கத் தொடங்கியது. இதில் தணிகாச்சலம் படுகாயமடைந்தார். அவரது தலையிலிருந்து ரத்தம்கொட்டியது. அவருக்கு அருகே நின்று ராதாகிருஷ்ணன் என்பவரும் காயமடைந்தார்.
இருவரும் உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்துஅறிந்தது ஆவேசமடைந்த அதிமுகவினர் திமுகவினருக்குச் சொந்தமான கடைகளை குறி வைத்துத் தாக்கினர்.இதில் 200க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன.
இதனால் அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது. பொதுமக்கள் மிரண்டு ஓடினர். அதிமுகவினர் தாக்குதலுக்குப்பதிலடி கொடுக்க திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் செஞ்சி பஸ் நிலையத்தில் திரண்டனர். இவர்களுக்குஎதிராக அதிமுகவினரும் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் மாறி மாறி சோடா பாட்டில்கள், கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். நிலைமையைகட்டுப்படுத்த முயன்ற போலீஸார் அது பலனளிக்காமல் போகவே, வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.இதையடுத்து இரு கும்பல்களும் சிதறி ஓடின.
தேர்தல் முடிந்த பின்னர் ஏற்பட்ட இந்த கலவரத்தால் செஞ்சி மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications