மின்சாரம் தாக்கி டாக்டர் தம்பதி பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கே.கே. நகரில் மின்சாரம் தாக்கியதில் டாக்டர்களான கணவனும், மனைவியும் பரிதாபமாக இறந்தனர்.

சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தவர் உமாசங்கர் (33). இவரதுமனைவி கல்பனா (33). இவரும் டாக்டர்தான். இவர்களது வீடு கே.கே.நகர் கோல்டன்ஜூபிலி குடியிருப்பில்உள்ளது.

டாக்டர் தம்பதிக்கு கெளதம் என்ற 6 வயது மகன் உள்ளான். இவர்களுடன் உமாசங்கரின் தந்தைஅர்த்தநாரீஸ்வரும் தங்கியுள்ளார். நேற்று காலை கல்பனா குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வாட்டர் ஹீட்டரிலிருந்து மின்சாரம் கசிந்து ஷவர் பாத் குழாய் மூலம் கசிந்துள்ளது. இதை அறியாதகல்பனா ஷவர் பாத்தை திருகியபோது மின்சாரம் தாக்கி பலியானார். சத்தமே போடாமல் அவர் பரிதாபமாகஇறந்தார்.

நீண்ட நேரமாகியும் தனது தாய் வெளியே வராததால் பயந்து போன குழந்தை கெளதம் குளியலறை முன்பு நின்றுஅழுதுள்ளான். அதைப் பார்த்து வந்த உமாசங்கர், குளிலயறைக் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் சத்தம் வராமல்போகவே, கதவை உடைத்து உள்ளே போனார்.

அப்போது கல்பனா பிணமாகிக் கிடந்ததைப் பார்த்த அவருக்கு ஒன்றும் ஓடவில்லை. மின்சாரம் அவர் உடலில்பாய்ந்து கிடப்பதை அறியாத அவர் கல்பனாவைத் தொட்டுத் தூக்கியுள்ளார். அப்போது உமா சங்கர் உடலிலும்மின்சாரம் பாய்ந்து அவரும் பரிதாபமாக இறந்தார்.

இதைப் பார்த்த சிறுவன் கெளதம் என்னவென்று புரியாமல் அழுது கொண்டிருந்தான். ஆனால் நல்ல வேளையாகஅவன் குளியலறைக்குள் செல்லவில்லை. இதனால் உயிர் பிழைத்தான்.

வெளியே சென்றிருந்த அர்த்தநாரீஸ்வரர் வீட்டுக்குத் திரும்பியபோது மகனும், மருமகளும் பிணமாகிக் கிடந்தைப்பார்த்த அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து இருஉடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பரிதாப சம்பவத்தால் அந்த குடியிருப்பே பெரும் சோகத்தில் மூழ்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+