களை இழந்த அதிமுக ஆண்டு விழா!
சென்னை:அதிமுகவின் 35வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் எளிமையாக கொண்டாடப்பட்டது.
அதிமுக நிறுவப்பட்டு இன்றுடன் 34 ஆண்டுகள் முடிவடைகின்றன. இதையொட்டி தமிழகம் முழுவதும்அதிமுகவினர் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அவர்களது கொண்டாட்டத்தைக்குலைக்கும் வகையில் மதுரை இடைத் தேர்தல் முடிவு அமைந்து விட்டது.
திமுக அமோக வெற்றி பெற்றதை விட கடந்த பொதுத் தேர்தலை விட இடைத் தேர்தலில் அதிமுக பெரும் சரிவைசந்தித்துள்ளது தான் அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இது அதிமுக ஆண்டு விழா கொண்டாட்டத்திலும் எதிரொலித்தது. உற்சாகமில்லாமல் ஆண்டு விழாவைஅதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வருகை தந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
கட்சிக் கொடியை ஏற்றி இனிப்புகளையும் வழங்கினார். பின்னர் ஆண்டு விழா நினைவு மலரையும் அவர்வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பி விட்டார்.
வழக்கமாக கட்சி அலுவலகத்திற்கு வந்தால், செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுப்பார் ஜெயலலிதா. ஆனால்மதுரை இடைத் தேர்தல் முடிவு அவருக்கு பெரும் அப்செட்டைக் கொடுத்ததால் செய்தியாளர்களை சந்திக்காமல்சென்று விட்டார் ஜெயலலிதா. இதனால் செய்தியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கூட அதிமுகவினர் சந்தோஷக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதைக்காண முடியவில்லை. அனைவரின் முகத்திலும் மதுரை இடைத் தேர்தல் முடிவு பிரதிபலித்ததைக் காண முடிந்தது.
இருப்பினும் கிராமப்புறங்களில் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள், தீவிர தொண்டர்கள் எம்.ஜி.ஆர். படங்களுக்குமாலை அணிவித்தும், அதிமுக கொடிகளை ஏற்றியும் உற்சாகத்துடன் ஆண்டு விழாவைக் கொண்டாடியதைக்காண முடிந்தது.












Click it and Unblock the Notifications