சென்னை: வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளிலும் நாளை காலை தொடங்கவிருந்தவாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்அறிவுறுத்தியதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த 13ம் தேதி நடந்த வாக்குப் பதிவின்போது பெரும்வன்முறை நடந்தது. கள்ள ஓட்டுக்கள் சரமாரியாக போடப்பட்டன. இதைத் தொடர்ந்துதேர்தலை ரத்து செய்யவும், வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும்அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று மீண்டும்நீதிபதிகள் கோபாத்யா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில்விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தலின்போது வன்முறையைத் தடுக்க என்னநடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை அரசு தலைமைவழக்கறிஞர் விடுதலையிடம் நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு அவர் அதுகுறித்து விவரங்கள் என்னிடம் இல்லை என்றார். இதையடுத்துமாநில தேர்தல் ஆணையரும், மாநகர காவல்துறை ஆணையரும் நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து இன்றுபிற்பகல் தேர்தல் ஆணையர் சந்திரசேகரனும், காவல்துறை ஆணையர் லத்திகா சரணும்நேரில் ஆஜராகினர்.

அவர்களிடம் நீதிபதிகள் சில கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றனர். பின்னர்நாளை தொடங்கவுள்ள சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையைநிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதை ஏற்ற தேர்தல் ஆணையர் சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளிலும் நாளைகாலை 8 மணிக்கு தொடங்கவுள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைப்பதாகஉத்தரவாதம் அளித்தார். இதையடுத்து நாளைக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள்ஒத்தி வைத்தனர்.

உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கொடுத்த உத்தரவாதப்படி நாளை பிற்பகல்2.30 மணி வரை சென்னை மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கை தொடங்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+