சுழலில் சிக்கிய விமானம்: 10 பேர் காயம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்:Air Indiaமும்பையிலிருந்து ஜெட்டா சென்ற ஏர் இந்தியா விமானம் நடு வானில் சுழல் காற்றில்சிக்கிக் கொண்டது. இதனால் விமானத்தில் இருந்த 10 பேர் காயமடைந்தனர்.

மும்பையிலிருந்து ஜெட்டாவுக்கு ஏர் இந்திய விமானம் சென்றது. அந்த விமானத்தில்69 பயணிகளும், 10 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் மஸ்கட்டுக்குமேலே பறந்து கொண்டிருந்தபோது குறைந்த காற்றழுத்த சுழலில் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து உஷாரான பைலட், விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்தார். மேலும்,பயணிகள் அனைவரும் தங்களது சீட் பெல்ட்டுகளை எடுத்துக் கட்டிக் கொள்ளுமாறுஅறிவிப்பதற்குள் விமானம் தடுமாற ஆரம்பித்தது. பயணிகள் பலர் கீழே விழுந்தனர்.குறிப்பாக கழிப்பறைக்குப் போயிருந்த பயணிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர்.விமான ஊழியர்கள் 2 பேர் மற்றும் 8 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

இதில் 60 வயது பெண்மணிக்கு இடுப்பில் பலத்த அடிபட்டது. ஜாகிருண்ணிசா என்றஅந்தப் பெண்மணி கூறுகையில், கழிப்பறையிலிருந்து நான் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது ஏற்பட்ட சுழற்சியில் தடுமாறி விழுந்து விட்டேன்.இதில் எனது இடுப்பில் பலத்த அடிபட்டு விட்டது என்றார்.

ஜெட்டாவில் விமானம் தரையிறங்கியதும் ஜாகிருண்ணாசி அங்குள்ள அல் காண்டாராஎன்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெட்டாவில் பத்திரமாக விமானம் தரையிறங்கியதும் தொடர்ந்து விமானத்தால் பறக்கமுடியுமா என ஏர் இந்தியா பொறியாளர்கள் பரிசோதித்தனர். அதன் பின்னர் விமானம்துபாய்க்குக் கிளம்பியது. அங்கு மேலும் 129 பயணிகளை ஏற்றிக் கொண்டுமும்பைக்குக் கிளம்பியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+