அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு!
மதுரை:மதுரை மத்திய தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலை விட இடைத் தேர்லில்கிட்டத்தட்ட 15,000 ஓட்டுக்களைக் குறைவாகப் பெற்று அதிமுக பெரும் சரிவைசந்தித்துள்ளது.
மதுரை மத்திய தொகுதிக்கு கடந்த 11ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில்பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் கெளஸ்பாட்ஷா 50,094 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர்ராஜன் செல்லப்பாவை அபாரமாக தோற்கடித்தார்.
ராஜன் செல்லப்பாவுக்கு வெறும் 19,909 வாக்குகளே கிடைத்தன. தேமுதிகவேட்பாளர் பன்னீர் செல்வம் 17,934 வாக்குகளைப் பெற்றார்.
இடைத் தேர்தல் முடிவு அதிமுகவுக்கு பெரும் பின்னடைவக் கொடுத்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்ற திமுகவேட்பாளர் பிடிஆர்.பழனிவேல்ராஜன் 43,155 வாக்குகளை மட்டுமே பெற்றார்.ஆனால் கெளஸ் பாட்ஷா இதை விட அதிகமாக பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் 35,992 வாக்குகளைப்பெற்றார். ஆனால் இம்முறை ராஜன் செல்லப்பாவுக்கு மிகக் குறைந்த வாக்குகள்கிடைத்துள்ளது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதேசமயம், பொதுத் தேர்தலில் 12,038 வாக்குகளை மட்டுமே பெற்றவிஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு இந்த முறை கூடுதலாக 5000 ஓட்டுக்கள்கிடைத்துள்ளது அக்கட்சிக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
அதிமுகவுக்கு கடந்த முறை கிடைத்த வாக்குகளை திமுகவும், தேமுதிகவும்பெருமளவில் பங்கு போட்டுக் கொண்டு விட்டது உறுதியாகியுள்ளது.
குறிப்பாக தேமுதிக பிரித்த வாக்குகள்தான் அதிமுகவுக்கு பெரும் அடியாகஅமைந்துள்ளது. பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் கூட இந்த இடைத்தேர்தலில் பெற முடியாமல் போனது அதிமுகவுக்கு பெருத்த பின்னடைவாககருதப்படுகிறது.
அதேசமயம், தேமுதிகவின் வளர்ச்சி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமேபெரும் சவாலாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications