சென்னை: வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு!
சென்னை:மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் மிகவும் அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தப் பதவிகளுக்குரியவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். அடுத்த தேர்தலில் இதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
திமுகவிடம் நாங்கள் மேயர் பதவியைக் கேட்டோம். அவர்கள் கொடுக்கவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சில இடங்களில் தனித்துப் போட்டியிட்டதற்கு திமுகவின் பிடிவாதப் போக்கேகாரணம். அதைத் தவிர்த்திருந்தால் மார்க்சிஸ்டுகள் தனியாக போயிருக்க மாட்டார்கள். இந்த உள்ளாட்சித்தேர்தலே கேலிக்கூத்தாகப் போய் விட்டது.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு முறையை உரியசட்டம் இல்லாமல் அமல்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
இது ஆட்சி நிர்வாகத்தில் நீதித்துறை குறுக்கீடு செய்வதாக அமைந்துள்ளது. சமூக நீதிமீது அக்கறை கொண்டுள்ள இடது சாரிக் கட்சிகள், பாஜக போன்றவை நீதித்துறையின்இத்தகைய குறுக்கீடுகள் குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளன.
இந்திய நீதித்துறை வரலாற்றில் நிலைக்குழு ஒன்றின் அறிக்கையை உச்சநீதிமன்றம்ஒருபோதும் கோரிப் பெற்றதில்லை. ஆனால் அது தற்போது நடந்துள்ளது. இந்த நிலைநீடித்தால், உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெற்ற பின்னர்தான் நாடாளுமன்றம்,சட்டசபைகளும் சட்டம் இயற்றும் நிலை உருவாகி விடும்.
அரசியல் சமச்சீருக்கு பெரும் ஊறு விளைவிக்கும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவுஅமைந்துள்ளது. இதன் மூலம் ஜனநாயக செயல்பாடுகள் முற்றிலும் சீர்குலையும்அபாயம் உள்ளது. அரசியல் சட்டத்தின் 122 மற்றும் 212 ஆகிய இரு பிரிவுகளும்மிகத் தெளிவாக உள்ளன. அதன்படி, சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தின்செயல்பாடுகளில் நீதித்துறை தலையிட முடியாது.
இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்க்க கூடாது என அரசியல் சட்டத்தில்எங்குமே குறிப்பிடப்படவில்லை. ஆனால் 50 சதவீததிதற்கு மேல் போகக் கூடாது எனஉச்சநீதிமன்றம் கூறுகிறது. அதேபோல, சமூக மற்றும் கல்வித் துறையில் உள்ளபிற்பட்டோரை மட்டுமே அரசியல் சட்டம் குறிப்பிடுகிறது.
ஆனால் பொருளாதார ரீதியில் பிற்பட்டோர் என்ற புதிய அணுகுமுறையைஉச்சநீதிமன்றம் கூறுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு இனிமேல் 2 நாள் மட்டுமேபிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
அரசியல் சார்பற்ற முறையில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதுஎனது எண்ணம். தற்போது உள்ள மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு தேவையற்றது.காமராஜர் அறிமுகப்படுத்திய 2 அடுக்கு முறைதான் சரியானது. வன்முறை,முறைகேடு குறித்து ஜெயலலிதா பேசக் கூடாது. அதற்கு அவருக்கு அருகதை இல்லை.
வங்கதேசத்தைச் சேர்ந்த முகம்மது யூனுஸுக்கு சிறு கடன்களை அளித்ததற்காகநோபல் பரிசு கிடைத்துள்ளது. உண்மையில் தமிழகத்தில் தான் சுய உதவிக் குழுக்கள்மூலம் பெருமளவில் சிறு கடன்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது அரசியலாக்கப்பட்டு விட்டது. சுய உதவிக்குழுக்களை முறைப்படுத்தி, சீர்படுத்த பொருளாதார நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அப்போதுதான் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் முழுமை பெறும்.
இலங்கை பிரச்சினை:
இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு தலையிடக் கோரி தமிழகத்திலிருந்துஅனைத்துக் கட்சிக் குழுவை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி டெல்லிக்குஅழைத்துச் செல்ல வேண்டும். இலங்கைப் படையினரால் தமிழர்கள் தொடர்ந்துதாக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த காலத்தில் நடந்தது குறித்து முதல்வர் கருணாநிதி பேசிக் கொண்டிருக்காமல்,இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும். இலங்கையில்தமிழர்கள் பாதிக்கப்படுவது கண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள், போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இலங்கை அரசோ அதைப் புறக்கணிக்கிறது. இந்தியாவின் யோசனைகளைஅது கண்டுகொள்வதில்லை. எனவே இந்த சமயத்தில் முதல்வர் கருணாநிதிதமிழகத்திலிருந்து அனைத்துக் கட்சிக் குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்றுஇலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்.
தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இலங்கை அரசை கட்டாயப்படுத்த கோரவேண்டும். வட கிழக்கு மாகாண இணைப்பை இலங்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுகுறித்து மத்திய அரசுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். அதற்கு முன்பு முதல்வர்கருணாநிதி தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications