சிபிஐ, சிபிஎம் மீதான வழக்குகள் வாபஸ்
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினர் மீது போலீஸார் தொடர்ந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது பெரும் வன்முறை நடந்தது. பல்வேறு முறைகேடுகளும்நடந்ததாக முக்கிய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த வன்முறைச் சம்பவத்தின் போது பல்வேறு கட்சியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள், வேட்பாளர்களும்அடங்குவர்.
போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கும், தேர்தல் வன்முறைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்தெரிவித்திருந்தன. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்று நினைக்கும் அளவுக்கு கம்யூனிஸ்ட்கட்சிகளின் கருத்து படு காட்டமாக இருந்தது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் வரதராஜன் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப்பேசினார். சென்னை தேர்தல் தொடர்பாக கருணாநிதியிடம் வரதராஜன் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் கருணாநிதி விடுத்த அறிக்கையில், அனைத்துப் பிரச்சினைகளையும் மனம் விட்டுப்பேசி சரி செய்து விட்டோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினர் மீது தொடரப்பட்டிருந்த வழக்குகள் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளன.
59வது வார்டு சிபிஎம் பிரகரும், தற்போதைய வார்டு கவுன்சிலருமான தேவகிஅந்தப் பகுதியில் வாக்குச் சாவடியை கைப்பற்ற நடந்த முயற்சியைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்.அப்போது தேவகி, அவரது மகன் சதீஷ் குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல மேலும் பலரும் நகரில் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளமுதல் தகவல் அறிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம். இதனால் ஓரிரு நாட்களில் அவர்கள்விடுதலை ஆகி வந்து விடுவார்கள் என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள சிபிஎம், சிபிஐ தொண்டர்கள் குறித்த விவரங்களை திங்கள்கிழமை முதல் போலீஸார்சேகரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைவிவரங்களையும் சேகரித்து வருகின்றனர். படிப்படியாக முதல் தகவல் அறிக்கையில் மாற்றம் செய்துஅனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் அதிமுக உள்ளிட்ட பிற கட்சியினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் எந்த மாற்றம்செய்யப்படவில்லை. அதிமுகவினர் மீது மொத்தம் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபத்தில் மிதக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினரை சமாதானப்படுத்தும் வகையிலேயே வழக்குகள் மாற்றப்பட்டுஅவர்களை விடுவிக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
