தமிழகம் முழுவதும் கன மழை
சென்னை:தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. வட கிழக்குப் பருவமழையின் தொடக்கமே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 20ம் தேதி முதல் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் என ஏற்கனவே வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. இதற்கேற்ப கடந்த சில நாட்களாகவே கடும் வெப்பம் குறைந்து காற்றுவீசத் தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்யத்தொடங்கியது. தலைநகர் சென்னையிலும், புறநகர்ப் பகுதியிலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டத்தொடங்கியது.
விடிய விடிய பெய்த மழை இன்று காலையிலும் நிற்காமல் தொடர்ந்து பெய்தது. பிற்பகல் 12 மணி வரை மழைநீடித்தது. இதேபோல தென் மாவட்டங்கள் பலவற்றிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
கோவை, சேலம், ஊட்டி உள்ளிட்ட மேற்குப் பகுதி மாவட்டங்களிலும் கூட நல்ல மழை பெய்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழையின் தொடக்கமே இந்த கன மழை என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தென் பகுதிகளிலும், வட மாவட்டங்களில் ஓரிருஇடங்களிலும் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications