தீபாவளி கொண்டாட்டம்: தமிழகத்தில் குதூகலம்!
சென்னை:நாளை தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கடைசி நேர ஷாப்பிங்கில்படு பிசியாக உள்ளனர்.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டிகடந்த ஒரு மாதமாகவே மக்கள் புதுத் துணிகள் வாங்கவும், பல்வேறு பொருட்களைவாங்கவும் ஆரம்பித்து விட்டனர்.
இந் நிலையில் விடிஞ்சா தீபாவளி என்ற நிலையில் கடைசி நேர ஷாப்பிங்கில்பொதுமக்கள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் சென்னையின் முக்கிய வணிகப் பகுதிகளான தி.நகர், பாண்டிபஜார்,பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெரிய கடைகள் தல் பிளாட்பார கடைகள் வரை அனைத்தையும் மக்கள்கூட்டம் மொய்த்துக் கொண்டுள்ளது.
கடைசி நேரத்தில் மிகவும் குறைந்த விலைக்கு பிளாட்பாரத்தில் கடை விரித்துபொருட்கள் விற்கப்படும் என்பதால் அவற்றை வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.
செனனை நகரில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்றும்காலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கடைசி நேர ஷாப்பிங்கில்ஈடுபட்டுள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் கடைசி நேர பர்ச்சேஸில் மக்கள்அலை மோதுகின்றனர்.
தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனையும், இனிப்புகள் விற்பனையும் படு சூடாகநடந்து வருகிறது.
வணிகப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் மக்கள் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி பொருட்களைவாங்கிச் செல்கின்றனர்.
தீபாவளியையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களுக்குவாழ்த்து தெரிவித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
தீபாவளியையொட்டி கையில் போனஸ், பணம் புரள்வதால் தங்கம் வாங்கவும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஒரே நாளில் திடீரென தங்கத்தின்விலையும் அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications