காங்கிரசுக்கு திமுக அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அக்கட்சிக்கு அங்கு ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்பதால் காங்கிரஸார் கடுப்பாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 3 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இசில் சேந்தமங்கலமும்ஒன்று. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சிகளின் பட்டியலில் சேந்தமங்கலம் இடம் பெற்றிருப்பதை அறிந்தகாங்கிரஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் இந்த பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வார்டில் கூட வெற்றி கிடைக்கவில்லை. மொத்தம் 18வார்டுகள் இங்கு உள்ளன. இதில் 13 வார்டுகளில் சுயேச்சைகளும், திமுக 3 வார்டுகளிலும், அதிமுக 2வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த பேரூராட்சி எப்படி ஒதுக்கப்பட்டது என்பது தெரியாமல் காங்கிரஸார்குழம்பியுள்ளனர். சுயேச்சைகளை வளைத்துப் போட்டால் மட்டுமே இங்கு காங்கிரஸ் கட்சியால் தலைவர்பதவியைப் பிடிக்க முடியும்.
இதேபோல, வெண்ணன்தூர், ஆலாம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்று அல்லது 2கவுன்சிலர்கள்தான் உள்ளனர். எனவே இங்கும் எப்படி தலைமை பதவியை வெல்வது, எப்படி அந்தப் பதவியைதிறம்பட நடத்துவது என்று தெரியாமல் காங்கிரஸார் புலம்புகின்றனர்.
மேலும் தேர்தல் உடன்பாட்டின்போது காங்கிரசுக்கு 2 மாநகராட்சிகள் தருவதாக ஒப்புக் கொண்ட திமுகஇப்போது ஒரே ஒரு மாநகராட்சியை மட்டுமே தர திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications