28ம் தேதி மேயர் தேர்தல்-சென்னைக்கு 29ல்
சென்னை:மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. கவுன்சிலர்கள் வாக்களித்துமேயரை தேர்வு செய்யவுள்ளனர். இதில் மதுரை, கோவை, திருச்சி, சேலம்,திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தல் 28ம் தேதி நடக்கிறது.சென்னை மேயர் தேர்தல் 29ம் தேதி நடக்கவுள்ளது.
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டஉள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள்வருகிற 25ம் தேதி பதவியேற்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் சுமார் 1.30 லட்சம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியேபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியுள்ளது. புதிதாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிஅமைப்புகளின் கவுன்சிலர்கள் வருகிற 25ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள்.
அதன் பின்னர் 28ம் தேதி மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய 5மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிக்கான தேர்தலும், நகராட்சிகள், 3ம் நிலைநகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர்தேர்தலும் நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 29ம் தேதி மேயர் தேர்தல் நடைபெறும் என மாநிலதேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
கவுன்சிலராக பதவியேற்றுக் கொள்ளாதவர்கள், மேயர், துணை மேயர், நகராட்சித்தலைவர், பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்தலில் பங்கேற்கமுடியாது என மாநில தேர்தல் ஆணையர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் ஸ்டாலின் நேரடியாக மேயர் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டார். அதிமுக 67 வார்டுகளிலும், திமுக 61 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. துணை மேயராகஅதிமுகவைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்படி முரண்பாடான நிர்வாகம் ஏற்பட்டதால் கடந்த அதிமுக ஆட்சியின் ஐந்து ஆண்டு காலமும் மாநகராட்சிநர்வாகத்தை சரிவர நடத்த முடியவில்லை. மேலும், ஸ்டாலினின் மேயர் பதவியும் பறிக்கப்பட்டது. அதைஎதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாநகராட்சியின் கடைசி காலத்தில் கராத்தேவையும் கைது செய்ய போலீஸை அனுப்பினார் ஜெயலலிதா.இதனால் மாநகராட்சி நிர்வாகமே முடங்கிப் போனது. இந் நிலையில் தற்போது நடந்த தேர்தலில் திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் அசுரத்தனமான பலத்துடன் மாநகராட்சியைப் பிடித்துள்ளது.
எதிர்க் கட்சியான அதிமுக வெறும் 4 கவுன்சிலர்களோடு முடங்கிவிட்டது. இதனால் கூட்டணிக் கட்சிகளே எதிர்க்கட்சியாக செயல்பட்டு திமுகவுக்கு லகான் போட வேண்டிய நிலையில் உள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications