திருச்சி-முட்டை ரவியின் கூட்டாளிகள் வன்முறை
திருச்சி:திருச்சி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி முட்டை ரவியின் கூட்டாளிகள்,திருச்சி சுப்பிரமணியபுரத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
6 கொலை வழக்கு மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபலரவுடி முட்டை ரவியை திருச்சி போலீஸார் நாவல்பட்டு அருகே ஞாயிற்றுக்கிழமைஅதிகாலை சுட்டுக் கொன்றனர்.
பயங்கர ரவுடியான முட்டை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதால் திருச்சி மக்கள் நிம்மதிஅடைந்துள்ளனர். ஆனால் அவனது கூட்டாளிகள் ஆத்திரமடைந்து நேற்று இரவுசுப்ரமணியபுரம் பகுதியில் வன்முறையில் இறங்கினர்.
அப்பகுதியில் வாகனங்கள் மீது கல்வீசியும், தடியால் அடித்தும் அவர்கள் தாக்குதல்நடத்தினர். இதில் ஒரு அரசுப் பேருந்து, ஒரு கார் ஆகியவற்றின் கண்ணாடிகள்உடைந்தன. தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். ஆனால்அதற்குள் அந்தக் கும்பல் தலைமறைவாகி விட்டது.
இதற்கிடையே, முட்டை ரவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவனதுசகோதரன் முருகானந்தத்தின் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. முருகானந்தம் இன்னொருவழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவியின் உடலை அவனது தாயார் செல்லம்மாள், சகோதரிகள் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
ரவியின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. இதையொட்டி திருச்சி நகரில்அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு போலீஸார் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பெண் நீதிபதிக்கு மிரட்டல்-பாதுகாப்பு:
இந் நிலையில் முன்னதாக முட்டை ரவியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்த மாஜிஸ்திரேட் பத்மாவுக்கு மிரட்டல் வந்துள்ளதாகத்தெரிகிறது.
போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டபோது தான் ரவி தப்பியோடினான். இதையடுத்தே அவனை தேடிப் போன போலீசார் அவனை சுட்டுக்கொன்றனர்.
இந் நிலையில் மாஜிஸ்திரேட் பத்மாவுக்கு முட்டை ரவியின் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளதையடுத்து அவருக்கும் அவரது வீட்டுக்கும் பலத்த பாதுகாப்புதரப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications