சென்னை மேயராகிறார் மா.சுப்பிரமணியம்
சென்னை:சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக மா.சுப்பிரமணியம் போட்டியிடுவார் என திமுக தலைவரும்,முதல்வருமான கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக சார்பில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிக்குப் போட்டியிடும்வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் மா.சுப்பிரமணியமும், துணை மேயர் தேர்தலில் சத்யபாமாவும்போட்டியிடுவார்கள்.
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் தேன்மொழி கோபிநாதனும், துணை மேயர் தேர்தலில் பி.எம். மன்னனும்போட்டியிடுவார்கள்.
சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் ரேகா பிரியதர்ஷினியும், துணை மேயர் தேர்தலில் பன்னீர் செல்வமும்போட்டியிடுவர்.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் ஏ.எல்.சுப்ரமணியமும், துணை மேயராக முத்துராமலிங்கமும்போட்டியிடுவார்கள்.
திருச்சி துணை மேயர் தேர்தலில் அன்பழகனும், கோவை துணை மேயர் தேர்தலில் கார்த்திக்கும்போட்டியிடுவார்கள் என கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் திமுகவுக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளது. எனவே மா.சுப்ரமணியம் எளிதில்வெற்றி பெறுவார். கடந்த மாநகராட்சி மாமன்றத்தில் மண்டலக் குழுத் தலைவராக இருந்தவர் மா.சுப்ரமணியம்.தென் சென்னையில் உள்ள 140வது வட்ட (சைதாப்பேட்டை) கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார். ஸ்டாலினின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.படு சுறுசுறுப்பாக செயல்படக் கூடியவர். துணிச்சலாக பேசி, செயல்படக் கூடியவர் சுப்ரமணியம்.












Click it and Unblock the Notifications