மேயர்: காங்கிரசுக்கு கோவை-திருச்சி ஒதுக்கீடு
சென்னை:கோவை மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 2 மாநகராட்சி மேயர் பதவியை ஒதுக்குவதாகஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு மேயர் பதவி மட்டுமே தர திமுக முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் பரவின.
இதனால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்தது. இந் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 மேயர் பதவிகளை ஒதுக்க திமுகமுன் வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு கோவை மற்றும் திருச்சி மேயர் பதவிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
மீதமுள்ள சென்னை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளை திமுக தன் வசம் எடுத்துக்கொண்டுள்ளது.
கோவை, திருச்சி துணை மேயர் பதவிகளை திமுக எடுத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது. மற்ற நான்குமாநகராட்சிகளின் துணை மேயர் பதவிகளும் கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிகிறது.
தலைவர் வேட்பாளர்கள் பட்டியல்:
இதற்கிடையே திமுக சார்பில் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும்துணைத் தலைவர் பதவிக்கு நிற்போரின் பட்டியலை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
இதேபோல, பாமக சார்பில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் குறித்தபட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications