சிவனாண்டியின் அப்பீல் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி
சென்னை:பதவி உயர்வு தொடர்பாக புதிய பட்டியல் தயாரிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி முன்னாள் உளவுப் பிரிவு எஸ்.பி. சிவனாண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுவை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்து விட்டது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் உளவுப் பிரிவு எஸ்.பி.யாக இருந்தவர் சிவனாண்டி. அதிமுக ஆட்சிக்கு படுஉதவியாக இருந்து வந்ததால் அவரை டிஐஜியாக பதவி உயர்வு கொடுத்தது அதிமுக அரசு.
பல சீனியர் அதிகாரிகளை புறம் தள்ளி விட்டு போடப்பட்ட இந்த பதவி உயர்வினால் பாதிப்படைந்த எஸ்.பி.சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட 5 காவல்துறை அதிகாரிகள் மத்திய நர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சிவனாண்டிக்கு பதவி உயர்வு கொடுத்து தயாரிக்கப்பட்ட பதவி உயர்வுப்பட்டியலை ரத்து செய்தது. பதவி உயர்வு தொடர்பாக புதிய பட்டியலைத் தயாரிக்கவும் உத்தரவிட்டது.
இந் நிலையில் அதிமுக ஆட்சி மாறி, திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும், தீர்ப்பாய உத்தரவைக்காரணம் காட்டி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்ட சிவனாண்டியை மீண்டும் எஸ்.பியாக பதவி இறக்கம் செய்ததுதிமுக அரசு. மேலும் அவரை ஊர்க்காவல் படைக்கு இடம் மாற்றி டப்பா பதவி தந்தது.
இந் நிலையில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தனது பதவி இறக்கத்தை ரத்துசெய்யக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார் சிவனாண்டி.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், மணிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சிவனாண்டியின்மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், பதவி உயர்வு தொடர்பாக புதிய பட்டியல் தயாரிக்க தீர்ப்பாயம்பிறப்பித்த உத்தரவு சரியானதே என்றும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications