மாஜி அதிமுக அமைச்சர்கள் நயினார்-வேலுச்சாமி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்ட்
சென்னை:முன்னாள் அதிமுக அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன், தாமோதரன், வேலுச்சாமிஆகியோரது வீடுகளில் இன்று காலை முதல் தமிழக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார்அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மதுரை கே.கே. நகர், பாளையங்கோட்டைமகாராஜாபுரம் மற்றும் நாகர்கோவில் உட்பட நயினார்நாகேந்திரனுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட வீடுகள்,அவரது உறவினர்கள் வீடுகள், பினாமிகளின் வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சூளூரில் உள்ள முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமியின்வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.
சோதனையில் சிக்கிய நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட இடங்கள்:
நெல்லை மாவட்டம் பனகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தில் உள்ள பூர்வீக வீடு.
நிெல்லை மகாராஜ நகரில் உள்ள நாகேந்திரனின் வீடு.
பெற்றோர் வசிக்கும் நாகர்கோவில் வீடு.
நெல்லை டவுனில் உள்ள நாகேந்திரனின் அண்ணன் வீரபெருமாள் வீடு.
பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் உள்ள மாமனார் சண்முகத்தின் வீடு.
அதே பகுதியில் உள்ள மைத்துனர்கள் சுப்பிரமணியம், வள்ளிக்கண்ணு, சந்திரசேகர் வீடுகள்.
குலவணிகர்புரத்தில் உள்ள மைத்துனருக்குச் சொந்தமான மருந்துக் கடை.
நெல்லை ஜங்ஷன் பகுதியில் உள்ள நயினார் காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம்.
நாகர்கோவிலில் உள்ள நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள நண்பரின் வீடு.
கேரளாவில் அவர் பங்குதாரராக உள்ள ஹோட்டல்.
ஆந்திராவில் பங்குதாரராக உள்ள ஹோட்டல்.
டெல்லியில் பங்குதாரராக உள்ள ஹோட்டல்.
சென்னையில் உள்ள நாகேந்திரனின் வீடுகள், இன்னொரு கட்டடம்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நயினாரின் வீட்டில், காலை 7 மணிக்கு டி.எஸ்.பி.ராஜேந்திரன்தலைமையிலான போலீஸ் படை சோதனையில் ஈடுபட்டது. அறை அறையாக சோதனை நடத்தப்பட்டது.
அண்ணா நகரில் உள்ள வீட்டில் டி.எஸ்.பி.பொன்னுச்சாமி தலைமையிலான போலீஸ் படை ரெய்டு நடத்தியது.இதேபோல புரசைவாக்கம் டானா தெருவில் நாகேந்திரனின் நண்பர் முத்துக்கிருஷ்ணனுக்குச் சொந்தமானஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டது.
இதன் சாவி நம்மாழ்வார்பேட்டையில் வசிக்கும் மேலாளர் கிருஷ்ணன் வீட்டில் இருந்தது. அங்கு சென்றுபோலீஸார் சாவியை வாங்கி வந்து திறந்து சோதனை போட்டனர். பின்னர் கிருஷ்ணன் வீட்டிலும் சோதனைநடந்தது.
எழும்பூர் ரயில் நிலையம் எதிரே நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான லாட்ஜிலும் சோதனை நடந்தது. அங்குதங்கியிருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட 5இடங்களில் சோதனை நடந்தது.
நெல்லை மகாராஜா நகரில் உள்ள நாகேந்திரன் வீட்டுக்கு போலீஸார் இன்று காலை ஆறேமுக்கால் மணிக்குச்சென்றபோது அங்கு நாகேந்திரன் இல்லை. இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமார்என்பவரை அழைத்து அவர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது.
நெல்லை ஜங்ஷன் பகுதியில் உள்ள நாகேந்திரனுக்குச் சொந்தமான வணிக வளாகத்திலும் சோதனைநடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications