4 மாநகர மேயர்கள் போட்டியின்றி தேர்வு: திருச்சியில் அதிமுகவை வீழ்த்தி காங். வெற்றி

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சிகளின் மேயர்கள்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திருச்சியில் அதிமுகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற்றது. அனைவருக்கும் அந்தந்த மாநகராட்சிகளின் ஆணையர்கள் பதவிப்பிரமாணம்செய்து வைத்தனர்.

தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற ஐந்து மாநகராட்சிகளில் மேயர் மற்றும் துணைமேயர், பிற நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலும் பதவியேற்பும் இன்று நடைபெற்றது.

மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவோர் இன்று காலை 9.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10.45 மணிக்கு இறுதிவேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் முடிந்தது. மதுரைமாநகராட்சி மேயர் பதவிக்கு திமுகவின் தேன்மொழி கோபிநாத் மட்டும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார். 10.45 மணி வரை வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து தேன்மொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சிஆணையர் தினகரன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய மேயராக தேன்மொழிபதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அதன் பின்னர் 100 பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலி, கருப்பு கெளன், செங்கோல்ஆகியவை புதிய மேயர் தேன்மொழியிடம் வழங்கப்பட்டது. மதுரை மாநகரின் முதல்பெண் மேயர் என்ற பெருமையை தேன்மொழி பெறுகிறார்.

மதுரை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுகவின்பி.எம்.மன்னன் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவர்போட்டியின்றி அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவையில் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்காலனி வெங்கடாச்சாலம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்துஅவருக்கு கோவை மாநகர ஆணையர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கோவை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு திமுகவின் கார்த்திக் மட்டும்வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

சேலம் மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ரேகா பிரியதர்ஷினிபோட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாநகராட்சி ஆணையர்பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதேபோல நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவின் ஏ.எல்.சுப்ரமணியம்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர்மோகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

திருச்சியில் மட்டும் மேயர் பதவிக்கு போட்டி எழுந்தது. காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமானைஎதிர்த்து அதிமுக சார்பில் மரியம் பிச்சை என்ற கவுன்சிலர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் அங்குதேர்தல் நடந்தது.

மொத்தம் உள்ள 60 கவுன்சிலர்களில் சாருபாலாவுக்கு 42 கவுன்சிலர்களின் ஆதரவு கிடைத்தது. இதையடுத்துஅவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாருபாலா மேயராக பதவியேற்றுக் கொண்டார்.

கோவை மேயர் தேர்தலில் கலந்து கொள்ளாமல் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள்புறக்கணிப்பு செய்தன.

இதேபோல மொத்தம் உள்ள 152 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில்பெரும்பாலானவற்றை திமுக கூட்டணியினரே கைப்பற்றினர்.

திண்டுக்கல், ஆத்தூர், ஈரோடு, கரூர், சத்தியமங்கலம், அறந்தாங்கி, மேலூர்,திருத்துறைப்பூண்டி, பத்மநாபபுரம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளில் திமுகவேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

சிவகாசி, திருமங்கலம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை காங்கிரஸ்கைப்பற்றியது. திண்டிவனம், தாராபுரம் ஆகிய தலைவர் பதவி தேர்தலில் பாமகவெற்றி பெற்றது.

ஓசூர், நாமக்கல், குடியாத்தம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை அதிமுகவென்றது. குழித்துறை, குளச்சல் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை எந்தக்கட்சியையும் சேராத சுயேச்சைகள் வென்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பவானி, புளியங்குடி, பரமக்குடி, பூந்தமல்லி நகராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது.

குளித்தலை நகராட்சித் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை எதிர்த்துதிமுக கவுன்சிலர் போட்டியிட்டு தலைவர் பதவியைக் கைப்பற்றி விட்டார்.

மொத்தம் உள்ள 152 நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக கூட்டணி 127 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதில் திமுக 95 தலைவர் பதவிகளையும், காங்கிரஸ் 20 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், விடுதலைச்சிறுத்தைகள் நெல்லிக்குப்பம் நகராட்சியிலும் வெற்றி பெற்றனர்.

அதிமுகவுக்கு 16 நகராட்சித் தலைவர் பதவிகள் கிடைத்துள்ளன. கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு ஒருநகராட்சியும் கிடைக்கவில்லை. சுயேச்சைகள் 7 நகராட்சித் தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர்.

பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை, வேலம்பாளையம் ஆகிய நகராட்சித் தலைவர் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு திமுகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அவர்களுக்கு சாதகமாக தேர்தல்நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+