ஜெ. மீது அதிமுக பிரமுகர் மோசடி புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது மோசடிப் புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்குஉத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஜியாவுதீன் என்பவர் மனு தொடர்ந்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஜியாவுதீன் என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ரூ.15,000 கொடுத்து விண்ணப்பிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்தது.

நானும் ரூ. 15,000 பணம் கட்டி சீட் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு சீட் கிடைக்கவில்லை.இதேபோல, சட்டசபைத் தேர்தலிலும் ரூ. 10,000 கட்டி சீட் கேட்டு விண்ணப்பித்தேன். இதிலும் எனக்கு சீட்கிடைக்கவில்லை.

எனவே நான் கட்டிய ரூ. 25,000 பணத்தையும் திரும்பத் தருமாறு கோரி கட்சியின் பொதுச் செயலாளரானஜெயலலிதாவுக்கு 2 முறை கடிதம் அனுப்பினேன். ஆனால் பலன் இல்லை.

இதையடுத்து ஜெயலலிதா மீது மோசடி புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி தேனாம்பேட்டைகாவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் 2 முறை வலியுறுத்தினேன். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே ஜெயலலிதா மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டைஇன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ரகுபதி, இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேனாம்பேட்டைஇன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+