ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை: கிருஷ்ணசாமி
மதுரை:தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் நினைக்கிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லைஎன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் தேர்தலில் ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்ற தகவலை சேகரித்துவருகிறோம். சில இடங்களில் தவறு நடந்துள்ளதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. கூட்டணி தர்மத்தைமீறி யாரும் நடக்கக் கூடாது என்று சில நாட்களுக்கு முன்புதான் கருணாநிதி எச்சரித்திருந்தார்.
ஆனால் சில திமுகவினர் துரோகம் செய்துள்ளனர். ஈரோடு, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில்காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவினர் கைப்பற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.வருந்தத்தக்கது.
இந்தப் பிரச்சினைக்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துபார்க்கவுள்ளோம். தேர்தலில் வன்முறை சாதாரணமானது தான், ஆனால் காங்கிரஸ் இடங்களை திமுக பிடித்ததுதுரதிர்ஷ்டவசமானது.
தமிழக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியும் பங்கு பெற வேண்டும் என காங்கிரஸார் நினைக்கிறார்கள். அந்தநினைப்பை தவறு என்று சொல்ல முடியாது, தவறும் கிடையாது. இதுகுறித்து கட்சி மேலிடத்திடம்சொல்லியுள்ளோம். இதுகுறித்து முதல்வர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் முடிவு செய்வார்கள்என்றார் கிருஷ்ணசாமி.
உள்ளாட்சித் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றிய அதிருப்தியில் காங்கிரஸார் உள்ள நிலையில்,அமைச்சரவையில் பங்கு கேட்பதில் தவறில்லை என்று கிருஷ்ணசாமி அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications