ஏ.சி. காஸ் கசிவு: காரில் சென்ற 3 பேர் பலி
சென்னை:கார் ஏ.சி. இயந்திரத்திலிருந்து காஸ் கசிவு ஏற்பட்டு அதனால் காரில் பயணித்த 3 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் சனிக்கிழமை இரவு விடிய விடிய பேய் மழை பெய்தது. இதனால்நகரமே அல்லோகல்லப்பட்டுப் போனது. அன்று இரவு சென்னையில் மொத்தம் 8 பேர்மழை காரணமாக இறந்தனர்.
இந்த நிலையில் தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு கார் சாலையோரம்நின்றிருந்தது. காருக்குள் இருந்த 3 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.அவர்கள் கார் மீது மின்சார வயர் விழுந்து இறந்திருக்கலாம் என முதலில்கருதப்பட்டது.
ஆனால் கார் ஏ.சி. இயந்திரத்திலிருந்து காஸ் கசிந்ததால் தான் 3 பேரும் இறந்ததுதற்போது தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் ஒருவரது பெயர் பாலகிருஷ்ணன்.இவர் மதுரையைச் சேர்ந்தவர். சென்னை தி.நகரில் சால்ஜர் டெக்னாலஜிஸ் என்றகம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இன்னொருவர் பாலச்சந்தர். இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் என்ஜீனியர். மற்றொருவர்பெயர் ஆறுமுகம். அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர்.
சனிக்கிழமை மாலை தனது அலுவலக கம்ப்யூட்டரில் பழுது ஏற்பட்டதால்பாலச்சந்தரை வரவழைத்து சரி செய்து கொண்டிருந்தார் பாலகிருஷ்ணன். இப்பணிமுடிய இரவு 11 ஆகி விட்டது. அப்போது கன மழை பெய்து கொண்டிருநத்து.இதையடுத்து 3 பேரும் ஹோட்டலில் சாப்பிடச் சென்றனர்.
ஜி.என்.செட்டி சாலையில் சென்றபோது கார் பழுதாகி விட்டது. இதையடுத்து அதைசரி செய்து கொண்டிருந்தனர். அப்போது பாலகிருஷ்ணன் தனது செல்போன் மூலம்சகோதரியின் மகன் தீபக்கிற்கு போன் செய்து நடந்ததைக் கூறி மழை நின்றவுடன்வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து போன் வரவில்லை.
இந்த நிலையில்தான் ஏ.சி. இயந்திரத்திலிருந்து காஸ்கசிந்து 3 பேரும்காருக்குள்ளேயே பிணமாகி விட்டனர். நேற்று காலை வரை பாலகிருஷ்ணன்வராததால், ஜி.என்.செட்டி சாலைக்கு வந்து பார்த்துள்ளார் தீபக். அப்போது கார் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த அவர் காருக்குள் மூன்று பேரும் அசைவில்லாமல்இருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றார்.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து காரின்கண்ணாடியை உடைத்து 3 பேரையும் மீட்டனர். அப்போதுதான் மூன்று பேரும்இறந்தது தெரிய வந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications