டெல்லி: வணிகர்கள் மீது போலீஸ் தடியடி
டெல்லி:இன்று முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டத்தில் குதித்துள்ள வணிகர்கள் சட்டசபையைமுற்றுகையிட்டதால் அவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார்கலைத்தனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் கடைகளை நடத்தவும், வியாபாரம் மேற்கொள்ளவும் டெல்லி மாநில அரசுதடை விதித்துள்ளது. அப்படி வைக்கப்பட்டுள்ள கடைகளை மூடி சீல் வைக்கும் நடவடிக்கையில் சமீபத்தில்இறங்கியது.
டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். டெல்லிஅரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வருகிற புதன்கிழமை வரை இடைக்காலத் தடை விதித்தது.வியாழக்கிழமை முதல் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது. இதற்குவணிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்தவணிகர்கள் முடிவு செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும்ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று காலை முதல் வணிகர்களின் போராட்டம் தொடங்கியது. டெல்லி நகரில் உள்ளஅனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றன. இதனால் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இன்று காலை வணிகர்கள் பெரும் கூட்டமாக திரண்டு சட்டசபை வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில்குதித்தனர். இன்று சட்டசபைக் கூட்டம் நடக்கும் நிலையில் வணிகர்கள் முற்றுகைப் போராட்டத்தில் குதித்ததால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு வணிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அப்படியும் அவர்கள்கலைந்து செல்லாததால் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி வணிகர்களை போலீஸார் கலைத்தனர்.
வணிகர்கள் போராட்டம் காரணமாக டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications