திமுக நிர்வாகிகள் சரமாரி டிஸ்மிஸ்!
சென்னை:கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி தலைவர் பதவிகளை திமுகவினர் பறித்து விட்டதாககூட்டணிக் கட்சியினர் கொந்தளித்துள்ள சூழ்நிலையில் 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியை விட்டுநீக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு எம்.எல்.ஏ.விடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டபல இடங்களை திமுகவினரே போட்டியிட்டு கைப்பற்றி விட்டனர். இதனால் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும்கடுப்பாகியுள்ளன.
பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவுக்கு இனிமேல் பிரச்சினை அடிப்படையிலான ஆதரவு மட்டுமே தரப்படும்,பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பாமக செயல்படும், திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டதாக படு ஆவேசமாககூறியுள்ளார்.
இதேபோல இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் கூட்டணிக்கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்ட, எதிராக செயல்பட்டவர்கள் மீது திமுக தலைமைநடவடிக்கை எடுத்து வருகிறது.
சனிக்கிழமை கட்சியிலிருந்து 18 திமுகவினர் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 55 பேரை கட்சியைவிட்டு திமுக மேலிடம் அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும் ஒரு எம்.எல்.ஏவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் கட்சிஉத்தரவுகளை மீறி மறைமுகமாக போட்டியிட்டு, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட கோவை,புதுக்கோட்டை, கரூர், சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் 55பேர் கட்சியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர திமுக எம்.எல்.ஏ. குளித்தலை மாணிக்கத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றுகூறியுள்ளார் அன்பழகன்.இன்று நீக்கப்பட்டவர்களில் 23 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 13 பேர் கரூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள்.
கடந்த சனிக்கிழமை எம்.எல்.ஏக்கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி.ராமசாமி ஆகியோருக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கத்திற்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
பாமக பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் மேலும் பல திமுகவினர் மீது நடவடிக்கை வரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications