31 ஊராட்சிகளின் தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு
சென்னை:தமிழகம் முழுவதும் 31 ஊராட்சி அமைப்புகளின் தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்குடிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சந்திரசேகரன் பேசுகையில், சில ஊராட்சிகளில் தலைவரைத்தேர்ந்தெடுப்பதற்கு போதிய ஆதரவு இல்லாத நிலை காணப்படுகிறது. சில இடங்களில் நிர்வாக பிரச்சினைகள்காரணமாக தேர்தலை நடத்த முடியாத நிலை.
மொத்தமாக 31 ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கு தேர்தலை நடத்த முடியாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.டிசம்பர் மாதத்திற்குள் இங்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ள ஊராட்சி இடங்கள்:
பஞ்சாயத்து ஒன்றியங்கள்: ஆணடிப்பட்டி, மதுரை கிழக்கு , சேலம், மொடக்குறிச்சி, தாளவாடி, முதுகுளத்தூர்,முத்துப்பேட்டை, நல்லம்பள்ளி, பள்ளிப்பட்டு, புழல், சாக்கோட்டை.
நகராட்சி: சிவகங்கை, வேலம்பாளையம்.
பேரூராட்சி: தென்கரை, பாலசமுத்திரம், பலபள்ளம், அரசிரமணி, அயோத்தியாபட்டனம், ஏத்தாப்பூர்,கொளத்தூர், மேச்சேரி, பனைமரத்துப்பட்டி, தாரமங்கலம், தேவூர், கூத்தாப்பூர், குற்றாலம், மீஞ்சூர்,காவேரிப்பாக்கம்.
மதுரை மாநகராட்சியின் 29வது வார்டில் வேட்பாளர் மரணம் காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை.இதேபோல சிவகங்கை நகராட்சியில் வார்டு எண் 9, கொடுமுடி பேரூராட்சியில் 9வது வார்டு ஆகியவற்றிலும்வேட்பாளர் மரணம் காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை.
இதேபோல, 561 பேரூராட்சிகளில் உள்ள 8807 வார்டுகளில் 26 வார்டுகளிலும், மேல்விஷாரம் நகராட்சியின்நான்கு வார்டுகளிலும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அங்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.
அடுத்த உள்ளாட்சித் தேர்தலின்போது 6 மாநகராட்சிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்பயன்படுத்தப்படும் என்றார் சந்திரசேகரன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications