பழனிச்சாமி பதவியேற்பு: கூட்டணியினர் புறக்கணிப்பு
சென்னை:தமிழக அமைச்சரவையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட பொங்கலூர் பழனிச்சாமி நேற்றுமாலை நடந்த எளிய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில்கலந்து கொள்ளாமல் திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.
தமிழக ஊரக தொழில்துறை அமைச்சராக பொங்கலூர் பழனிச்சாமியை நியமிப்பதாக,முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் சமீபத்தில் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து நேற்று மாலை பொங்கலூர் பழனிச்சாமி பதவியேற்றுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் ஆளுநர் பர்னாலா பழனிச்சாமிக்குபதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது என்றும், ஆனால் கலந்துகொள்ளாமல் அவர்கள் புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஊராட்சித் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல தலைவர்பதவிகளை உடன்பாட்டை மீறி திமுகவினர் கைப்பற்றியதால் கூட்டணியில் உள்ளகட்சிகள் அனைத்தும் அதிருப்தியுடன் உள்ளனர். பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் கூட்டணியினர் பங்கேற்காததுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications