பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக;இனி பாமக எதிர்க்கட்சி-ராமதாஸ் அதிரடி
சென்னை:உள்ளாட்சித் தேர்தலில் திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டது. இனிமேல் பாமக பொறுப்புள்ளஎதிர்க்கட்சியாக செயல்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவற்றைதிமுக போட்டி வேட்பாளர்கள் கைப்பற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதனால் பாமக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்தன. குறிப்பாக பாமகநிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை விட்டார்.
இந்த அறிக்கைக்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராமதாஸுக்குவிளக்கம் அளித்து விரிவாக கூறியிருந்தார். இந்த அறிக்கையில் திமுகவினர் மட்டும் துரோகம் செய்யவில்லை,பாமகவினரும் சில இடங்களில் கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டதாககூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்தார். அப்போது முதல்வர்கருணாநிதியை கடுமையாக விமர்சித்து ராமதாஸ் பேட்டி அளித்தார்.
ராமதாஸ் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் பாமக வேட்பாளர்கள் பல இடங்களில்தோற்கடிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி தர்மத்தை திமுகவினர் கடைப்பிடிக்கவே இல்லை.
இதை நாங்கள் சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டால், நான்கு சுவர்களுக்குள் நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்கிறார் கலைஞர். வெளியில் சொல்லாவிட்டால் எங்கே போய்ச் சொல்வது?
இத்தனை தவறுகள் நடந்துள்ளன என்று நாங்கள் கூறியபோதிலும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல்,தவறுகளையெல்லாம் அவர்கள் செய்து விட்டு, பச்சை துரோகம் செய்து விட்டு, எங்கள் மீதே குற்றம் சாட்டுகிறார்கலைஞர். இதை வெளியில் வேறு சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்.
தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை திமுக அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் மதிக்கவே இல்லை.எங்களை இழிவுபடுத்தி விட்டனர்.
பாமகவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் போட்டியிடப் போவதைமுன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட கருணாநிதி, அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.
அதேபோல 6 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளை பாமகவுக்கு தருவதாக கூறியிருந்தார் கருணாநிதி.ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த உடன்பாட்டையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார்.
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு அதிருப்தி உள்ளது உண்மைதான். ஆனால் திமுக ஆட்சிக்கு எங்களால்எந்தப் பாதகம் ஏற்படாது. இறுதி வரை திமுக ஆட்சிக்கு ஆதரவு தருவோம்.
பாமக இனிமேல் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும். இப்போது உள்ள அதிமுகவை பொறுப்பானஎதிர்க்கட்சி என்று கூற முடியாது. பாமக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இனிமேல் செயல்படும் என்றார்ராமதாஸ்.
திமுக மீதும் முதல்வர் கருணாநிதி மீதும் கடுமையாக குற்றம் சாட்டிப் பேசியுள்ள ராமதாஸ், இனிமேல் பாமகஎதிர்க்கட்சியாக செயல்படும் என்று ஆவேசமாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
பாமகவைப் போலவே அதிருப்தி அடைந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுபோல முடிவுகளை அறிவிக்குமாஎன்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications