ரயிலில் மோதிய கார்: பெரும் விபத்து தவிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:மேட்டூர் அருகே ஆளில்லாத ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற டாடா சுமோ கார், ரயில் மீது மோதிபின்னோக்கித் தள்ளப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓரிரு நாட்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் என்ற இடத்தில் ஆளில்லாத ரயில்வேகிராசிங்கைக் கடக்க முயன்ற ஷேர் ஆட்டோ மீது ரயில் மோதியதில் 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பே இன்னும் மறையாத நிலையில் மேட்டூர் அருகே பெரிய ரயில் விபத்துதவிர்க்கப்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து டாடா சுமோ காரில் சிலர் வந்து கொண்டிருந்தனர். வழியில் ஆளில்லாதரயில்வே கிராசிங்கை அவர்கள் கடக்க முயன்றனர்.

அப்போது, சேலம் நோக்கிச் சென்ற ரயில் வேகமாக வந்துள்ளது. அதை கார் டிரைவர் கவனிக்கவில்லை. கார்தண்டவாளத்தை தாண்ட முயன்றபோது, ரயில் குறுக்கிட்டதால் காரின் முன்பகுதி ரயில் மீது மோதியது.

மோதிய வேகத்தில் கார் பலத்த வேகத்துடன் பின்னோக்கித் தள்ளப்பட்டு விட்டது. இதனால் காரில் இருந்தஅத்தனை பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒரு விநாடி கார் வேகமாக சென்றிருந்தாலும் கூட அதில்இருந்த அத்தனை பேரும் உயிரிழந்திருப்பார்கள்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் முக்கால் மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ரயில்கிளம்பிச் சென்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+