ஸ்ரீபெரும்புதூரின் வளர்ச்சி: மன்மோகன் பாராட்டு
சென்னை:தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மேலும் பல தொழில் பூங்காக்களை அமைக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் பிளக்ஸ்ட்ரானிக்ஸ் தொழில் பூங்கா சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தொழில் பூங்காவை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இந்தியாவின் ஹார்டுவேர் தொழில்நுட்பத் தலைநகராகஸ்ரீபெரும்புதூர் மாறி வருகிறது. இது பெருமை தருவதாக உள்ளது.
இங்கு பிளக்ஸ்ட்ரானிக்ஸ், நோக்கியா, டெல், மோட்டோராலோ உள்ளிட்ட பல உலகப் புகழ் பெற்றநிறுவனங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளது. வெகு வேகமாக ஸ்ரீபெரும்புதூர் சர்வதேச நகரமாகமாறி வருவது குறிப்பிடத்தக்கது.
மின்னணு சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்தியில் ஸ்ரீபெரும்புதூர் உலகத் தரம் வாய்ந்தநகரமாக மாறி வருகிறது. இது தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பதாகும்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள், உழைப்பு,நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதேபோல மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதிமாறன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் இடைவிடாத முயற்சிகளும், செயல்பாடுகளும்தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் நடந்து வரும் தொழில் வளர்ச்சி மற்றும் புரட்சியின் மூலம் விரைவில் நாட்டிலேயே முதலாவதுஇடத்திற்கு தமிழகம் முன்னேறும் என்பதில் சந்தேகம்இல்லை என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க பல்வேறு திட்டங்களை தமிழகஅரசு வைத்துள்ளது. அனைத்து வசதிகளுடனும் கூடிய மேலும் பல தொழில் பூங்காக்கள் தமிழகத்தில்அமைக்கப்படும்.
தொழில் வளர்ச்சியை சீரான வேகத்தில் கொண்டு செல்லத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டங்களும் அமல்படுத்தப்படும். தற்போது உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை, தற்போதையதேவைக்கேற்ப மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், போக்குவரத்து மேம்பாடு, குடிநீர், கழிவு நீர், சாலை வசதிஉள்ளிட்டவை மேம்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டம் சென்னை நகர மக்களுக்கு மிகவும் உறுதுணையாகஇருக்கும். போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும்.
சென்னை அருகே உள்ள சிங்கம்பெருமாள் கோவில்-ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வண்டலூர் -வாலாஜாபாத் ஆகியஇடங்களை இணைக்கும் வகையில் சாலைகளை பெரிதிபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சாலைகளின் முக்கியப் பகுதிகள் 6 வழிச் சாலையாகவும், மற்றவை 4 வழிச் சாலையாகவும்விரிவுபடுத்தப்படும். திமுக அரசின் நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்பின் மூலம் தமிழகத்தில்தொழில் வளம் பெருகும், தொழில் புரட்சி ஏற்படும், நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாகும்என்பதில் சந்தேகம் இல்லை என்றார் கருணாநிதி.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications