அரசு வக்கீலான முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி
சென்னை:சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கண்ணதாசன், தமிழக அரசின் கூடுதல் தலைமை அரசுவழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் கண்ணதாசன். அவரதுபதவியை நிரந்தரமாக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதாலும், அவரது நீதிபதி பதவிக் காலத்தை நீட்டிக்கமறுத்ததாலும், கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் கண்ணதாசனின் பதவிக்காலம் காலாவதியாகிவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே நீதிபதி பணியிடம் காலாவதியானது இதுவே முதல் முறையாகும்.இதனால் கண்ணதாசன் பதவியிலிருந்து விலக நேரிட்டது. இதைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில்வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் பதவிக்கு கண்ணதாசன்நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை தமிழக அரசு புதிதாக உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே பி.எஸ்.ராமன், எஸ்.ராமசாமி, எஸ்.வீரராகவன் ஆகியோர் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாகஉள்ளனர். கண்ணதாசன் நியமனத்தை ஆளுநர் பர்னாலா அறிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளது நீதித்துறை வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications