சதாமைக் கொல்வது நியாயமற்றது: போப்பாண்டவர்
வாடிகன்சிட்டி:பழிக்குப் பழி வாங்குவது போல சதாம் உசேனை தூக்கிலிட்டுக் கொல்வது நியாயமற்ற செயல் என்றுபோப்பாண்டவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து போப்பாண்டவரின் கருத்து வாடிகன்சிட்டியின் நீதித்துறைத் தலைவர் கார்டினால் ரினாட்டோ மார்ட்டினோ தெரிவிக்கையில், இது நிச்சயம்பழிவாங்கும் செயல். நியாயமற்றது.
ஒரு குற்றத்துக்கு இன்னொரு குற்றம் செய்வது பரிகாரம் ஆகாது. கொலைக்குக் கொலை, கண்ணுக்குக் கண்,பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்ற செயல்களில் ஈடுரபடுவது நாகரீகம் ஆகாது.
சதாம் உசேனை தூக்கில் போட வேண்டாம். அவர் மனித குலத்துக்கு எதிரான குற்றத்தை செய்திருக்கலாம்.ஆனால் உயிர்கள் புனிதமானது. எனவே அவரை தூக்கிலிடக் கூடாது என்று போப்பாண்டவர் கூறியதாகமார்ட்டினோ தெரிவித்தார்.
புஷ் வரவேற்பு:
இதற்கிடையே சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஈராக்குக்கு நல்ல நாள். அந்நாட்டு ஜனநாயகத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி.கொடுங்கோல் ஆட்சியின் கொடூரச் சட்டம் மாறி, சட்டத்தின் ஆட்சி திரும்பியுள்ளதை இது காட்டுகிறது.
ஜனநாயகப் பாதையில் அடி போட ஆரம்பித்திருக்கும் ஈராக் மக்களுக்கு இது மிகப் பெரிய சாதனை.
ஈராக் மக்களின் மனதில் பீதி, பயத்தைத் தவிர வேறு எதையுமே இடம் பெற முடியாதபடி, கொலை, சித்திரவதைஎன ஆட்சி புரிந்த சதாம் உசேனுக்கு இது சரியான தண்டனை தான்.ஈராக்கை மேம்படுத்த வேண்டிய வேலைகள் பாக்கி உள்ளன. இங்கு உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமஉரிமை, சம நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு இந்த தீர்ப்பு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.ஒருங்கிணைந்த சமுதாயமாக ஈராக் மாற இது உதவும் என்றார்.


Click it and Unblock the Notifications
