கேரள முதல்வரின் தமிழக எரிச்சல்
திருவனந்தபுரம்:முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு எரிச்சலூட்டும் விதமாக அமைந்துள்ளதாக கேரளமுதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களின் சாகுபடிக்காக நெய்யாறு அணையில் இருந்து தண்ணீர்திறந்து விட கேரளம் தயாராக இருக்கிறது. இந்த விஷயத்தில் கேரள அரசு திறந்த மனதுடன் நடந்து கொள்கிறது.
ஆனால், முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து எரிச்சலூட்டும்விதமாகவே அமைந்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் இரு மாநிலஅரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தலாம் என எங்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் அனுப்பினார்.
இப்படி ஒருபுறம் செயல்பட்டாலும், மறுபுறம் தமிழகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்துஎரிச்சலூட்டும் விதமாக அமைந்துள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications