தமிழ் அகதிகளை கொன்று குவிக்கும் இலங்கை
கொழும்பு:இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் பள்ளி மற்றும் மருத்துவமனை மீது இலங்கைராணுவத்தினர் நடத்திய கொடூரமான பீரங்கி தாக்குதலில் 45 தமிழ் அகதிகள்கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மட்டக்களப்பில் வாகாரை என்ற இடத்தின் அருகே உள்ள கதிரவேலி கடற்கரைகிராமத்தில் விக்னேஷ்வரா வித்யாலயம் என்ற பள்ளி உள்ளது.
இலங்கை ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட தமிழர்கள்இங்கு அகதிகளாக தங்கியுள்ளனர். இந் நிலையில் இந்தப் பள்ளி மீது நேற்று காலைஇலங்கை ராணுவம் திடீரென பீரங்கித் தாக்குதல் நடத்தியது.
மேலும், ராக்கெட் குண்டுகளையும் வீசித் தாக்கியது. நிராயுதபாணியாக பள்ளிக்குள்இருந்தவர்கள் மீது ராணுவம் நடத்திய இந்த கொடூரமான தாக்குதலில் 45 பேர்கொல்லப்பட்டனர். இதில் கை குழந்தைகளும் அடங்குவர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் பலியானவர்களின்உடல்கள் வாகாரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து வாகாரை மருத்துவமனை மீதும் இலங்கை ராணுவத்தினர் தாக்குதல்நடத்தினர். இதனால், நோயாளிகள் அங்கிருந்து தப்பியோட வேண்டிய நிலைஏற்பட்டது.
இந்தத் தாக்குதலையடுத்து தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக வந்து புலிகள் கட்டுப்பாடுப் பகுதிகளில் வந்துதங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களை விட்டு ஓடி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முல்லைத்தீவு பகுதியில் செஞ்சோலை என்ற குழந்தைகள்முகாம் மீது இலங்கை விமானப் படை நடத்திய குண்டுவீச்சில் 80க்கும் மேற்பட்டபெண் குழந்தைகள் பலியாயினர்.
இந் நிலையில் இரண்டாவது முறையாக அப்பாவிகளை ஒட்டு மொத்தமாக கொன்றுகுவித்துள்ளது இலங்கை.
இந்த விவகாரத்தில் இந்தியா இனியும் அமைதி காக்காமல் தமிழர்களின் உயிருக்குஉத்தரவாதம் கிடைக்கச் செய்ய வேண்டியது அவசியம்.












Click it and Unblock the Notifications