யுஎஸ் விஷ நெல்: பிடுங்கி எறிந்த விவசாயிகள்
கோயம்புத்தூர்:கோவை அருகே ஆலந்துரை என்ற இடத்தில் மரபியல்ரீதியாக மாற்றம் செய்யப்பட்டு சோதனைக்காகபயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை அழித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மரபியல் ரீதியாக மாற்றப்பட்ட நெல் விதைகளை (பேசில்லஸ்துரின்ஜியன்ஸிஸ்) இந்தியாவில் சோதனைக்காக பல்வேறு இடங்களில் பயிரிட்டுள்ளது. இந்த வகை விதைகள்இதுவரை அமெரிக்காவிலேயே பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிபிபிடத்தக்கது.
இதற்கு முக்கியக் காரணம், இந்த வகை நெற் பயிர்களை பயிரிடும்போது அந்த நிலத்தில் உள்ள, விவசாயத்திற்குமுக்கியமான பல உயிரினங்களை அதாவது மண்புழு, பூச்சிகள் உள்ளிட்டவற்றை இந்த நெல் விதை அழித்துவிடும் நச்சுத் தன்மை கொண்டது.
மேலும், இந்த வகை அரிசியைச் சாப்பிடுவோருக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பல உடல் உபாதைகளும் ஏற்படும்எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நெற் பயிரை அமெரிக்காவில் சோதிக்காமல், இந்தியாவில்கொண்டு வந்து விவசாயிகளிடம் கொடுத்து சோதனைக்காக பயிரிட்டுள்ளனர்.
அதிக அளவில் மகசூல் தரும் என்பது மட்டுமே இந்த வகை மரபியல்ரீதியாக மாற்றப்பட்ட நெல் விதைகளின்ஒரே நல்ல விஷயம். மற்றபடி இது வயலின் மறு விளைச்சல் தன்மையை பாதிப்பதோடு, மண்புழு உள்ளிட்டவிவசாயிகளின் நண்பர்களையும் அழித்து விடும், உடல் உபாதைகளுக்கு வித்திடும் என்பதால் இந்த வகைநெல்லை வளர்ந்த நாடுகள் சோதனைக்குக் கூட வாங்க மறுத்து விட்டன.
இதனால் நம் போன்ற இளிச்சவாய நாடுகளிடம் தற்போது இந்த நெல்லை தள்ளி விட அமெரிக்கா தீவிரமாகமுயற்சித்து வருகிறது. மரபியல் ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட நெல், கோவை மாவட்டம் ஆலந்துரை அருகேஉள்ள ராமநாதபுரம் கிராமத்தில் கிட்டத்தட்ட 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
ரங்கராஜு என்பவருக்கு சொந்தமான நிலம் இது. இந்த நிலத்தை குத்தகைக்கு வாங்கி தனியார் விதை நிறுவனம்இங்கு மரபியல் ரீதியாக மாற்றப்பட்ட நெல் பயிர்களை பயிரிட்டுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால் தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருப்பது மரபியல் ரீதியாக மாற்றப்பட்ட நெல்வகை என்பது ரங்கராஜுவுக்கே தெரியாதாம். அதிக மகசூல் தரும் நெல் வகையை சோதனையிட பயிரிடுவதாகமட்டுமே அந்த தனியார் விதை நிறுவனம் ரங்கராஜுவிடம் கூறி நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்ாடு பசுமை இயக்கம், தமிழ்நாடு ஆர்கானிக் விவசாயிகள் சங்கம் உள்ளிட்டபல்வேறு விவசாய அமைப்புகள் இந்த வகை நெல் பயிர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றன.
இந் நிலையில் தமிழ்நாடு வேளாண் காப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள்,ராமநாதபுரத்தில் பேசில்லஸ் வகை நெல் பயிரிடப்பட்டிருந்த வயலுக்குள் இறங்கினர்.
வயலுக்குள் புகுந்த அவர்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற் பயிற்களை பிடுங்கி எறிந்தனர். மேலும் அந்தவகை நெல் பயிரிடப்பட்டிருந்த பகுதியை சுற்றிலும் கயிறு கட்டினர். வயலுக்கு உள்ளே இது மரபியல் ரீதியாகமாற்றப்பட்ட நெல் பயிரிடப்பட்டுள்ள பகுதி என்ற எச்சரிக்கைப் பலகையையும் வைத்தனர்.
இந்தப் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
மனிதர்கள் பயன்படுத்த லாயக்கில்லாதது:
போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவரும், விவசாய தொழலாளர் கட்சித்தலைவருமான கே.செல்லமுத்து கூறுகையில்,
இந்த வகை பயிர்கள் தமிழகத்திற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இதேபோல தமிழகத்தின் வேறு சில இடங்களிலும் இப்பயிர் நடப்பட்டுள்ளது. அங்கும் சென்று அவற்றைஅழிப்போம். இது ஒரு நச்சுப் பயிர். வேர் முதல் நுனி வரை இதில் நச்சுதான் உள்ளது. மனிதர்கள் பயன்படுத்தவேலாயக்கில்லாதது.
இந்த இடத்தில் இவ்வளவு பெரிய அளவில் சோதனை ரீதியாக இதை பயிரிட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது. இதைக்கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உண்டு. ஆனால் அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார்.
இந்த வகைப் பயிர்களை பயிரிட்டதால் ஆந்திரா, மகாராஷ்டிராவில் விவசாயிகள் பெரும் துயரங்களைசந்தித்துள்ளனர். பெருமளவிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட அவலமும் நடந்துள்ளது என்றார்.
இந்த வகை நெல்லை சாப்பிட்ட 1,500 பேருக்கு முடக்குவாதம் வந்துள்ளதாகவும், 37 பேர்உயிரிழந்துள்ளதாகவும், தமிழ்நாடு பசுமை இயக்க தலைவர் ஜீவானந்தம் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications