ஜப்பான் கடலில் மிக பயங்கர பூகம்பம்-சுனாமி எச்சரிக்கை-மக்கள் வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ:ஜப்பானின் குரில் தீவுப் பகுதியில் இன்று மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.1 என்றஅளவுக்கு இந்த பூகம்பம் பதிவானது. இதையடுத்து ஜப்பானின் கிழக்குப் பகுதியையயும் ரஷ்யாவின் தென்கிழக்குப் பகுதியையும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


டோக்கியோவில் இருந்து 1,700 கி.மீ. தொலைவில் வட மேற்கே இந்த பூகம்பத்தின் மையம் இருந்தது.ரஷ்யாவை ஒட்டிய ஹோகாய்டோ மாகாணத்தின் அருகே உள்ளது இந்த குரில் தீவுக் கூட்டம்.

இந்திய நேரப்படி இன்று மாலை இந்த பூகம்பம் தாக்கியது. எட்டோர்பு தீவுகளுக்கு வடக்கே கடலுக்கு அடியில் இந்த பூகம்பம்ஏற்பட்டது. 8.1 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பத்தால் ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கக் கூடும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 6.5 அடி உயர அளவுக்கு சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என ஜப்பான் பூகம்பவியல் கழகம்எச்சரித்துள்ளது. இந்த சுனாமி அலைகள் ஹோக்கைடோ, ஹோன்சு ஆகிய பகுதிகளைத் தாக்கக் கூடும் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது.

முதல் சுனாமி அலைகள் இன்று இரவு 9 மணிக்கு ஹோக்கைடோ தீவுகளைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஹோக்கைடோ தீவுகளில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அகற்றப்பட்டு வருகின்றனர்.

ஜப்பானின் பசிபிக் கடலோர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பூகம்பம் ரஷ்யாவிலும் பூகம்பம் உணரப்பட்டுள்ளது. பசிபிக் கடலோரத்தில உள்ள ரஷியப் பகுதிகளையும் சுனாமிதாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பூகம்பவியல் கழகத்தில் பதிவான அளவுப்படி இந்த பூகம்பத்தின் அளவு 7.8 ரிக்டராக பதிவாகியுள்ளது. பூகம்பபாதிப்பு குறித்து இதுவரை தகவல் இல்லை.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசிய கடல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் (9 ரிக்டர்) 11நாடுகள் சுனாமி அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டன, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதுநினைவிருக்கலாம்.

இப்போது ஜப்பான் அருகே ஏற்பட்ட பூகம்பத்தால் இந்திய கடல் பகுதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என இந்தியபூகம்பவியல் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.

முதல் சுனாமி அலைகள் இன்று இரவு 9 மணிக்கு ஹோக்கைடோ தீவுகளைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஹோக்கைடோ தீவுகளில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அகற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த பூகம்பம் ரஷ்யாவிலும் பூகம்பம் உணரப்பட்டுள்ளது. பசிபிக் கடலோரத்தில உள்ள ரஷியப் பகுதிகளையும் சுனாமிதாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+