நஷ்டத்தால் விரக்தி: வயலை எரித்த விவசாயி
வாதா (மகாராஷ்டிரா):விவசாயத்தில் பெரும் நஷ்டமானதாலும், பக்கத்து கிராமத்து விவசாயி இதே காரணத்திற்காக தற்கொலை செய்ததுமனதை பாதித்ததாலும், விரக்தி அடைந்த மகாராஷ்டிர மாநில விவசாயி ஒருவர் தனது 12 ஏக்கர் நெல்வயலையும் தீவைத்து கொளுத்தினார்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் வாதா அருகே உள்ள கெல்தான் கிராமம் பழங்குடியினர் அதிகம் வாழும்பகுதியாகும்.
கெல்தான் கிராமத்திற்கு அருகே உள்ள வாவேகர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாம்தியோ சங்கர் தாக்கரே. 48வயதாகும் இவர் விவசாயம் செய்வதற்காக வங்கியில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் விவசாயத்தில் ஏற்பட்டநஷ்டத்தால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இதனால் பெரும் மன வருத்தம் அடைந்தார் சங்கர் தாக்கரே. இந்த நிலையில், கடனைத் திருப்பிச் சொல்லி இந்தஅதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதால் சங்கர் மிகவும் வேதனை அடைந்தார். இதைத் தொடர்ந்து தனது வீட்டில்தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த கெல்தான் கிராமத்தைச் சேர்ந்த நாராயன் பேடு பாட்டீல் என்ற விவசாயி கடும் விரக்தி அடைந்தார்.இவரும் கடன் வாங்கித்தான் தனது 12 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். இவராலும் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாத நிலை இருந்தது.
தாக்கரேவின் மரணத்தால் விரக்தியுற்ற பாட்டீல் தனது வயலை தீவைத்துக் கொளுத்தப் போவதாக அறிவித்தார்.இதை அறிந்ததும் தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தியாளர்கள், பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் விரைந்துவந்தனர். அவர்கள் புடை சூழ தனது வயலுக்குத் தீவைத்தார் பாட்டீல்.
இந்த செயல் குறித்து பாட்டீல் கூறுகையில், பல கூட்டுறவு வங்கிகளிடம் கடன் வாங்கித்தான் ான் விவசாயப்பணிகளை தொடங்கினேன். ஆனால் தொடர் மழையால் நான் பயிரிட்டிருந்த நெற் பயிர்களில் பாதியளவுக்குமழையில் வீணாகி விட்டது. மீதள்ள பயிராலும் எனக்கு லாபம் கிடைக்காது.
இந்த நிலையில்தான் தாக்கரேவின் மரணம் என்னைப் பாதித்தது. அதனால்தான் அதிருப்தி அடைந்து எனதுவயலைக் கொளுத்தி விட்டேன்.
முதலில் பூச்சி வந்து எனது பயிர்களைப் பாதித்தது. பிறகு மழை வந்து நாசம் செய்தது. இப்படி இருந்தால்எங்களால் எப்படி கடன் தொகையை திருப்பித் தர முடியும்?
பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. ஆனால் அத்திட்டத்தை அதிகாரிகள் முறையாகசெயல்படுத்துவதில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளைக் காக்கஅரசும், அதிகாரிகளும் முன்வருவதில்லை என்று கண்ணீர் மல்கக் கூறினார் பாட்டீல்.
இந்த இரு சம்பவங்களும் மகாராஷ்டிராவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications