மலை மீது கூடாரம்: மர்ம கும்பல் கைது!
மேட்டூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மலை மீது கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த 10 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
மேட்டூர் அருகே பாலமலை என்ற மலை உள்ளது. இங்கு நேற்று மலை உச்சியில் சிலர் கூடாரம் அமைத்துத்தங்கியிருந்ததை வனத்துறையினர் கண்டனர்.
இதனால் அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அதிரடிப்படையினர்வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் நேற்று மாலை மலையில் ஏற ஆரம்பித்தனர். ஆனால் கன மழை காரணமாக மலை ஏறுவதுதடைபட்டது. இதையடுத்து இன்று காலை மீண்டும் மலை ஏறும் முயற்சி தொடங்கியது.
மலை உச்சியை அடைந்ததும் கூடாரத்தை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் உள்ளே இருந்தவர்களைவெளியே வர உத்தரவிட்டனர்.இதையடுத்து கூடாரத்திற்குள் இருந்த 10 பேர் வெளியே வந்தனர். அவர்களிடம் அதிரடிப்படையினர் விசாரணைநடத்தியபோது, அனைவரும் அருகே உள்ள நத்தக்காடு என்ற மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.
மலை மீது விளையும் மர வள்ளிக் கிழங்கை எடுத்துக் கொண்டு போக அவர்கள் வந்து கூடாரமிட்டுத்தங்கியிருந்ததும் தெரிய வந்தது.
இந்தக் கிழங்கை அடிவாரத்திற்குக் கொண்டு போய் கிலோ கிழங்கு 10 ரூபாய்க்கு விற்கவும் அவர்கள்திட்டமிட்டிருந்தனர்.
வனத்துறைக்குச் சொந்தமான இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications