கேரளாவுக்கு எதிராக நெடுமாறன் போராட்டம்
மதுரை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கேரள அரசுக்கு எதிராகடிசம்பர் 4ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன்கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 9 மாத காலமாகிறது.அந்த உத்தரவை நிறைவேற்ற தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கேரள முதல்வர் அச்சுதானந்தன்தீர்ப்பை நிறைவேற்றவில்லை.
உச்ச நீதிமன்ற தீர்பை நிறைவேற்றக் கோரி கேரள அரசுக்கு எதிராக பொருளாதார தடை மறியில் போராட்டம்நடத்த உள்ளோம். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி, கோழி உணவு பொருள், காய்கறிகள், பால் மற்றும்பல்வேறு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதை வரும் டிசம்பர் 4ம் தேதி தடுத்து ஒருநாள்அடையாள மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இதுகுறித்து ஏற்கனவே பாமக, விடுதலை சிறுத்தைகள் இயக்கம், மதிமுக போன்ற பல்வேறு கட்சிகள் போராட்டம்நடத்தபோவதாக அறிவித்துள்ளன. டெல்லியில் 23ம் தேதி நடக்கவுள்ள பேச்சு வார்த்தையில் தமிழக முதல்வர்எங்களது போராட்த்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேரள முதல்வரிடம் தமிழக மக்களின்கொந்தளிப்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாததை எதிர்த்து இருமாநில முதல்வர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடரப்படும்.
இலங்கை அதிபர் ராஜபக்சே 26ம் தேதி இந்தியா வருவதையொட்டி அன்றைய தினம் கறுப்பு தினமாககடைப்பிடிக்கப்படும் என அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications