இலங்கைக்கு ஆயுதங்கள் கிடையாது: மன்மோகன்
சென்னை:தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையிலான தாக்குதல் ஆயுதங்களை இலங்கைக்கு இந்தியா வழங்காதுஎன்று பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பிரதமருக்கு வைகோ கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடாது, யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 சாலையை திறக்க வேண்டும், ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்களைவழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்.
இக்கடிதத்திற்கு பிரதமர் பதில் அனுப்பியுள்ளார். அதில் மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது:
சமீபத்தில் இலங்கையில் நடந்த சம்பவங்களில் தமிழர் பகுதிகளில் பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்தது நம்அனைவருக்கும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற வன்முறைகளில் நியாயம் இல்லை. இதை நாம் தொடர்ந்துசொல்லி வருகிறோம்.
அப்பாவிகளைக் கொல்வது, குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும் கொல்வது ஏற்கத்தக்கதல்ல.இதுகுறித்து இலங்கை அரசிடம் இந்தியாவின் கவலையைத் தெரிவித்துள்ளோம்.
அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு வழி வகுக்கும் முறைகளைக் கையாளாமல், தமிழர்களுக்கு நியாயமானஉரிமைகள் கிடைப்பதற்காக பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியாகத் தீர்வு காண வேண்டும் என இலங்கைஅரசிடம் இந்தியா வலியுறுத்தும்.
யாழ் சாலை மூடப்பட்டதால் அங்குள்ள தமிழர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படுவது குறித்து நீங்கள்தெரிவித்துள்ள கவலையில் நானும் பங்கு கொள்கிறேன். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில்வாழும் மக்களுக்காக அரிசி, பால் பவுடர், சர்க்கரை ஆகியவற்றை மனிதாபிமான அடிப்படையில் இந்தியாஅனுப்புகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையிலான ராணுவத் தளவாடங்களை இந்தியா தருவதில்லைஎன்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. இலங்கையின் குடிமக்களான தமிழர்களின் உரிமைகளை மதிக்கவேண்டும் என்று இலங்கை அரசிடம் ஒவ்வொரு முறையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இந்தக் கருத்தை மீண்டும் இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளோம். அப்பாவி மக்களுக்கு ஆபத்து ஏற்படாதவகையில், தூதரக நடவடிக்கை மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ நாங்கள் முயற்சிப்போம் என்றுதெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் மன்மோகன் சிங்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications